பஜாஜ் பல்ஸர் 160NS பைக் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் பைக் வரிசையான பல்ஸர் அணிவரிசையில் பஜாஜ் பல்ஸர் 160NS பைக் மாடலை துருக்கியில் அறிமுகம் செய்துள்ளது. பல்சர் 160 என்எஸ் பைக்கில் 160சிசி ஆயில் கூல்டூ என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்ஸர் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள 160 சிசி நேக்டு ஸ்போர்ட்ஸ் பைக்கில் இடம்பெற்றுள்ள 160.3சிசி என்ஜின் மாடல் 15.5 பிஎஸ் சகதியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்ஸர் வரிசையில் அமைந்துள்ள 150 என்எஸ் மாடல் 17 பிஎஸ்ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

150என்எஸ் மாடலை போன்ற வடிவ தாத்பரியங்களை பெற்றுள்ள 160என்எஸ் பைக்கில் முன்பக்க   டயர்களிலும் டிஸ்க் பிரேக் அமைப்புடன் மேலும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது. இதுதவிர டிரம் பிரேக் ஆப்ஷனும் உள்ளது. 135 கிலோ எடை கொண்டுள்ள 160என்எஸ் பல்சர் 150 என்எஸ் பைக்கினை விட 5 கிலோ குறைவானதாகும். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் காயில் ஸ்பீரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

சர்வதேச அளவிலான மாடலாக கருதப்படுகின்ற பஜாஜ் பல்ஸர் 160NS பைக் இந்தியா வருகை அடுத்த வருடத்தின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரலாம் ஆனால் இந்திய சந்தை வருகை தொடர்பாக எவ்விதமான அதிகார்வப்பூர்வமான தகவலும் இல்லை.

 

 பஜாஜ் பல்ஸர் 160NS படங்கள்

Exit mobile version