Home Auto News

பழைய கார் வாங்குவது எப்படி ?

பயன்படுத்திய கார்கள் அதாவது பழைய கார் வாங்க விரும்புபவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமானதாகும்.எனவே புதிய கார் வாங்குபவர்களை விட அதிகப்படியான கவனம் செலுத்துதல் அவசியம்.

first choice

பழைய கார்களில் கவனிக்க வேண்டியவை சில

1. பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதற்க்கென தனியான யூஸ்டு கார்கள் ஷோரூம் எல்லாம் வந்துவிட்டன. பல முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்த சேவையை தொடங்கி உள்ளன. எனவே இந்த மாதிரியான இடங்களில் கார் வாங்குவது சிறப்பாக இருக்கும்.

2. பயன்படுத்தி கார்களின் விலை மலிவாக இருக்கும் ஆனால் தரமான நாம் தேர்வு செய்வது மிக கடினமாக இருக்கும். முன்பு போல அடிபட்ட கார்களை தெரியாமல் விற்பனை செய்ய வாய்ப்பில் பல முன்னணி யூஸ்டு கார்கள் ஷோரூம்களில் அதன் இயல்பான தரத்தை சோதனை செய்து உறுதிபடுத்துகிறார்கள்.

3. கார்களை வாங்கும் விற்பனையாளர் அல்லது யூஸ்டு கார்கள் ஷோரூம் தரமானவர்களா என்பதனை உறுதிசெய்த பின்னர் அவர்களை அனுகுங்கள்.

4. உங்களுக்கான பட்ஜெட் தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்கள் பட்ஜெட்க்குள் சரியான காரினை தேர்வு செய்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

5. கார் தேர்வு செய்யும்பொழுது முன்னணி கார் நிறுவனங்களின் சிறப்பான மாடல்களை தேர்ந்தேடுங்கள். நீங்கள் வாங்கப் போகும் பழைய காரின் புதிய கார் விலையை அறிந்து கொள்வது அவசியமாகும்.

6. யூஸ்டு கார்களுக்கு கூட சில யூஸ்டு கார் டீலர்கள் வாரண்டி தருவார்கள். வாரண்டி தருபவர்களிடம் காரினை தேர்வு செய்யுங்கள்.

7. பைனான்ஸ் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கும் பல பைனான்ஸ் நிறுவனங்கள் கடனுதவி வழங்குகின்றன. பைனான்ஸ் தேர்ந்தேடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் வட்டிவிகிதங்கள் மற்றும் இதர செலவுகள் போன்றவற்றை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். பழைய கார்கள் பைனான்ஸ் தவிர்ப்பது நல்லது.

8. காரினை சோதனை செய்யுங்கள் ஒரு முறைக்கு இருமுறை உங்களுக்கு தெளிவான அனுபவங்கள் இருந்தாலும், அனுபவமான மெக்கானிக்கை கூட்டி சென்று சோதியுங்கள். வாகனத்தினை ஓட்டி அதன் குறைகளை கவனியுங்கள்.

9. காரின் முழுமையான விவரங்களினை சோதனை செய்யுங்கள். குறிப்பாக பதிவுபுத்தகம்,சாலைவரி,காப்பீட்டு விவரங்கள், அந்த காரின் மீது கடன் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள். திருட்டு கார்கள் கூட விற்க்கப்படுவதற்க்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்க்குதான் தரமான நிறுவனங்களின் யூஸ்டு கார் ஷோரூம்களை பயன்படுத்த வேண்டும்.

10. கார் வாங்கிய முன் அதன் முழுமையான டாக்குமென்ட்களை வாங்கி பரிசோதித்து கொள்ளுங்கள். அதன் மூலம் காரின் சரியான விவரங்களை அறியலாம்

11. விலை விபரங்களை கேட்ட பின்னர் அதன் தர்ரத்தை பொருத்த காரின் மீது பேரம் பேசுங்கள்.

12. கார் வாங்கிய பின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள். விரைவில் காரினை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

பழைய கார் வாங்குவதன் நன்மைகள் தீமைகள் பற்றி அடுத்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்…

Exit mobile version