புதிய பாரத்பென்ஸ் இன்டர்சிட்டி கோச் பஸ் அறிமுகம்

டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன பிரிவின் பாரத்பென்ஸ் பிராண்டில் புதிதாக 16 டன் பாரத்பென்ஸ் இன்டர்சிட்டி கோச் பஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புற நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய பேருந்து வந்துள்ளது.

பாரத்பென்ஸ் இன்டர்சிட்டி கோச் பஸ்

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 9 டன் பிரிவில் பள்ளி, டூரிஸ்ட் மற்றும் பணியாளர் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பேருந்துகளை டெய்ம்லர் விற்பனை செய்து வருகின்ற நிலையில் அடுத்த கட்டமாக 16 டன் எடை கொண்ட பிரிவில் புற நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பான சொகுசு அம்சங்களுடன் கூடிய பேருந்தாக இன்டர்சிட்டி கோச் பஸ் விளங்கும் என டெய்ம்லர் இந்தியா தெரிவிக்கின்றது.

12 மீட்டர் நீளமுள்ள இந்த பேருந்தில் 238 hp (175 kW) பவர் மற்றும் 850 Nm டார்க் வெளிப்படுத்தும் முன்பக்க பொருத்தப்பட எஞ்சின் உள்ளது. பயணிகளுக்கு மிக சிறப்பான இடவசதியை வழங்கும் வகையில் ஒவ்வொரு இருக்கைகளுக்கு இடையில் 790 மிமீ லெக்ரூம் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புறங்களில் ஏர் சஸ்பென்ஷன் பெற்று விளங்குகின்ற இந்த பேருந்தில் சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும் வகையிலான அடிச்சட்டத்தை பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சம்

எந்தவிதமான வெல்டிங் முறையிலும் வடிவமைக்கப்படாமல் AIS-031 CMUR எனப்படும் பஸ் பாதுகாப்பு கோடிங் முறையை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள பாரத்பென்ஸ் இன்டர்சிட்டி கோச் பஸ்சில் மிக சிறப்பான நிலைப்பு தன்மை கொண்ட உலோகங்கள் மற்றும் தீ பிடிக்கும் தன்மையற்ற பாகங்களை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் சொகுசு தன்மை போன்ற வசதிகளுடன்  குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட மாடலாக விளங்குவதுடன் சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் மாசு அளவை குறைக்கும் வகையிலான செலக்டிவ் கேடலைட்டிக் ரெடக்சன்   (Selective Catalytic Reduction -SCR) எனும் தொழில்நுட்பத்தைப் பெற்றள்ள புதிய வரிசை மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக அட்புளூ (Adblue) என்னும் திரவநிலை யூரியாவை அடிப்படையாகக் கொண்ட அட்ப்ளூவை எக்ஸாஸ்ட்டில் தெளிக்க செய்வதன் மூலம், NOx (நைட்ரஜன் ஆக்ஸைடு) மாசு அளவுகளைக் கணிசமாகக் குறைகின்றது. பாரத் பென்ஸ் இந்த SCR தொழில்நுட்பம் இன்ஜினில் இருந்து தனித்து இயங்குவதற்கு, குறைந்த அளவு டீசல் மட்டுமே செலவாகும் என்பதால், அட்ப்ளூவை நிரப்ப குறைந்த இடைவெளியே போதுமானதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாடு முழுவதும் உள்ள பென்ஸ் டிரக் நிறுவனத்தின் 130 அங்கீகாரம் பெற்ற விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் AdBlue விற்பனை செய்யப்பட உள்ளது.

Exit mobile version