Automobile Tamilan

புதிய பாரத் பென்ஸ் டிரக்குகள் வரிசை அறிமுகம்

டெய்ம்லர் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற புதிய பாரத் பென்ஸ் டிரக்குகள் வரிசை BS-IV தர எஞ்சினை கொண்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.  9 டன் முதல்  49 டன் வரையிலான மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை பென்ஸ் டிரக்குகள் அறிமுகம் செய்துள்ளது.

 பாரத் பென்ஸ் டிரக்குகள்

ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 4 தர எஞ்சினை விதிமுறைகளை  பெற்ற டெய்மலர் பென்ஸ் மாடல்கள் கூடுதல் சிறப்பு வசதிகளாக அதிக மைலேஜ், பாதுகாப்பு, அதிக பாரம் தாங்கும் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளை பெற்றதாக விளங்கும் வகையில் வடிவமைகப்பட்டுள்ளதாக விளங்கும் என டெய்மலர் இந்தியா தெரிவித்துள்ளது.

புதிய ரேஞ்ச் வரிசையில் க்ரூஸ் கன்ட்ரோல், ஏசி,  பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி முகப்பு விளக்கு, பார்க் செய்ய உதவும் வகையில் மறைத்திருக்கும் பிளைன்ட் ஸ்பாட்களை காட்டும் வகையிலான திரை உடன் கூடிய ரிவர்ஸ் கேமரா,  டியூப்லெஸ் டயர்கள், டீசல் டேங்க்கில் இருக்கக்கூடிய டீசலைத் திருட்டிலிருந்து பாதுகாக்கக்கூடிய கருவி, க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட ஸ்டீல் கேபின், ஏபிஎஸ் பிரேக் போன்றவற்றை பெற்ற நவீன அம்சங்களை பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2015 முதல் பிஎஸ் 4 டிரக் வாகனங்கள் இந்திய சந்தையில் 1000க்கு மேற்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள லாரிகள் அதிகபட்சமாக 42,00,000 கிமீ பயணித்துள்ள நிலையில் கிடைக்கபெற்ற கருத்துகள் என்னவென்றால் மிக சிறப்பாக வாகனங்கள் இயங்குவதுடன் , அதிக மைலேஜ் , குறைந்த பராமரிப்பு செலவை பெற்றிருப்பதாக பயனாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என பாரத் பென்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஆர்

மேம்படுத்தப்பட்ட புதிய பிஎஸ் 4 தர எஞ்சின் பெற்ற மாடல்களில்இடம்பெற்றுள்ள செலக்டிவ் கேடலைட்டிக் ரெடக்சன்   (Selective Catalytic Reduction -SCR) எனும் தொழில்நுட்பத்தைப் பெற்றள்ள புதிய வரிசை மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக அட்புளூ (Adblue) என்னும் திரவநிலை யூரியாவை அடிப்படையாகக் கொண்ட அட்ப்ளூவை எக்ஸாஸ்ட்டில் தெளிக்க செய்வதன் மூலம், NOx (நைட்ரஜன் ஆக்ஸைடு) மாசு அளவுகளைக் கணிசமாகக் குறைகின்றது. பாரத் பென்ஸ் இந்த SCR தொழில்நுட்பம் இன்ஜினில் இருந்து தனித்து இயங்குவதற்கு, குறைந்த அளவு டீசல் மட்டுமே செலவாகும் என்பதால், அட்ப்ளூவை நிரப்ப குறைந்த இடைவெளியே போதுமானதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாடு முழுவதும் உள்ள பென்ஸ் டிரக் நிறுவனத்தின் 130 அங்கீகாரம் பெற்ற விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் AdBlue விற்பனை செய்யப்பட உள்ளது.

பேஸ் மற்றும் பிரிமியம் எனும் இரு விதமான வேரியன்ட்களில் கிடைக்கின்ற இந்த டிரக்குகளில் பிரிமியம் மாடல்களில் கூடுதல் வசதிகளை ஒட்டுநர்களுக்கு அளிக்கின்றது.

 

Exit mobile version