புதிய மாருதி எர்டிகா அக்டோபர் 10 முதல்

வரவிருக்கும் மாருதி எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் மைலேஜ் அதிகம் தரும் வகையில் SHVS ஹைபிரிட் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா

மேம்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா இந்தோனேசியா ஆட்டோ ஷோவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எம்பிவி சந்தையில் சிறப்பான விற்பனை இலக்கை எட்டிவரும் எர்டிகா நடுத்தர மக்களை பெரிதாக கவர்ந்துள்ளது.

மாருதி எர்டிகா காரில் 1.4 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 5 வேக மெனுவல் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். செலிரியோ காரில் உள்ள ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியை எர்டிகா பெறுகின்றது.

எர்டிகா டீசல் மாடலில் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதனுடன் சியாஸ் காரில் உள்ளது போல எஸ்எச்விஎஸ் ஹைபிரிட் நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் என்பதனால் இதன் மைலேஜ் சியாஸ் காரை போல லிட்டருக்கு 28.09கிமீ மைலேஜ்க்கு இணையாக  தர வாய்ப்புகள் உள்ளது.

தோற்றத்தில் சிறிய மாற்றங்களை பெற்றுள்ள எர்டிகா உட்புறத்தில் சில கூடுதல் வசதிகளை பெற்றிருக்கும். புதிய எர்டிகா வரும் அக்டோபர் 10ந் தேதி சந்தைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. புதிய எர்டிகா விலை ரூ.6.80 லட்சம் முதல் 8.90 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

New Maruti Ertiga come with AMT gearbox and SHVS

Exit mobile version