அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புத்தம் புதிய மாருதி சுசூகி டிஸையர் செடான் ரக மாடல் புதிய ஸ்விஃப்ட் காரினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

புதிய மாருதி சுசூகி டிஸையர்

  • சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற புதிய ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதாக வரவுள்ளது.
  • புதிய டிஸையர் நவீன தலைமுறைக்கு ஏற்ப வசதிகளை பெற்றதாக விளங்கும்.
  • ஏப்ரல் அல்லது மே 2017 மாதத்தில் விற்பனைக்கு வரலாம்.

மாருதி பலேனோ காரின் பிளாட்பாரத்தினை அடிப்படையாக கொண்டு இலகுஎடை மற்றும் உறுதிமிக்க பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு ஜப்பான் மற்றும் ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதே புதிய டிஸையர் காராகும்.

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற காரில் இடம்பெற்றுள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இருமாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோபாக்ஸ் மேலும் மாருதி சுசூகி ஏஜிஎஸ் என அறியப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கும்.

விற்பனையில் உள்ள மாடலை விட குறைந்தபட்சம் ரூ.25,000 வரையிலான கூடுதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய டிஸையர் காரின் அனைத்து வேரியன்டிலும் இருபக்க காற்றுப்பைகள் மற்றும் ஏஎபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கலாம்.

புதிய டிஸையர் காரின் போட்டியாளர்கள் ஃபிகோ ஆஸ்பயர் , ஹோண்டா அமேஸ் , ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் டாடா ஸெஸ்ட் போன்றவைகளாகும்.

*மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ள படங்கள் புதிய ஸ்விஃப்ட் காரின் ஐரோப்பியா மாடலாகும்.