Home Auto News

புதிய ஹோண்டா ஜாஸ் ஜூலை 8 முதல்

புதிய ஹோண்டா ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வரும் ஜூலை 8ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹோண்டா ஜாஸ்

புதிய ஜாஸ் கார் மிகுந்த வரவேற்ப்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமேஸ் , சிட்டி மற்றும் மொபிலியோ கார்களை தொடர்ந்து ஹோண்டா டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் ஜாஸ் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

சிட்டி காரில் உள்ளதை போலவே உட்ப்புற கட்டமைப்பினை கொண்டிருக்கும் மேலும் அமேஸ் மற்றும் பிரியோ காரில் உள்ள 1.2 பெட்ரோல் என்ஜின் இதிலும் பயன்படுத்தப்பட்ட உள்ளது. 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி தானியங்கி என இரண்டு கியர்பாக்சில் கிடைக்கும்.

டீசல் மாடலில் அமேஸ் மற்றும் சிட்டி கார்களில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்த உள்ளனர்.

ஜாஸ் வருகையால் ஹூண்டாய் எலைட் ஐ20  , ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வரவிருக்கும் சுசூகி YRA போன்ற பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு சவாலினை ஏற்படுத்தும்.

புதிய ஹோண்டா ஜாஸ் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 4.50 லட்சம் முதல் 9 லட்சத்திற்க்குள் இருக்கும்.

Exit mobile version