மஹிந்திரா கார்கள் விலை உயர்வு – மத்திய பட்ஜெட்

மஹிந்திரா  கார் நிறுவனம் தன்னுடைய கார்களின் விலை மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரி உயர்வினால் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

கேயூவி100 முதல் XUV500 வரையிலான அனைத்து மாடல்களும் இந்த விலை உயர்வினை சந்தித்துள்ளன. 1 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரையிலான விலை உயர்வினை பெற்றுள்ளது. குறிப்பாக புதிய கேயூவி100 காரும் இந்த வரி உயர்வினை பெற்றுள்ளது.

சுமார் ரூ. 5500 முதல் ரூ.47,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கபட்ட பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீத கூடுதல் வரி மற்றும எஸ்யூவி கார்களுக்கு 2.5 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள கேயூவி100 மினி எஸ்யூவி கார் இதுவரை 21,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. மேலும் காத்திருப்பு காலம் 3 மாதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு காலத்தினை குறைக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க மஹிந்திரா திட்டுமிட்டு வருகின்றன. அனைத்து கார் நிறுவனங்களுமே தனது கார் மாடல்களின் விலை உயர்த்த தொடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மத்திய பட்ஜெட் கூடுதல் சுமையாகியுள்ளது.

 

Exit mobile version