Site icon Automobile Tamilan

மஹிந்திரா E20 ரேவா எலெக்ட்ரிக் கார் விரைவில்

பெட்ரோல் டீசல் எரிபொருள்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு மாற்று வழியினை பலவாறாக முயற்சித்து கொண்டிருகின்றனர்.
 எனவே மாற்று முயற்சியில் முதலாவதாக இருப்பது எலெக்ட்ரிக் கார்தான். 
எலெக்ட்ரிக் கார்கள் அவ்வளவாக வரவேற்பினை பெற ஏனோ தவறி விடுகின்றன. அனால் இவைகள் இன்றைய நிலையில் தவறினாலும் எதிர்காலத்தில் இதுதான் எலெக்ட்ரிக் கார்கள் உலகத்தினை ஆளும் என்பதில் ஐயப்பாடில்லை.
 எலெக்ட்ரிக் மாற்றாக ஹைட்ரஜன் சோதனையில் இருந்தாலும் அதில் பல சிக்கல்கள் சேமித்து வைப்பதில் தற்பொழுது இருகின்றது எதிர்காலத்தில் அவை மாறும்.
Mahindra E20
மஹிந்திரா நிறுவனம் பல மாதங்களுக்கு முன்பே ரேவா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை கைப்பற்றியது. புதிதாக மஹிந்திரா E20 என்ற பெயரில் ரேவா NXR காரினை திரும்ப அறிமுகம் செய்ய உள்ளது. 2001 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரேவா NXR சிறப்பான வரவேற்பினை பெறவில்லை.
புதிய ரேவா NXR வருகிற டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.இப்பொழுது சோதனை ஒட்டத்தில் உள்ளது. 4 நபர்கள் பயனிக்கலாம் முன்பை விட பாடியில் வலுவினை கூட்டியுள்ளனர்.
29kw சக்தி கொண்ட எலெக்ட்ரிக் மோட்டரினை பயன்படுத்தியுள்ளனர்.

மஹிந்திரா E20 அதிகப்பட்ச வேகம் 104km/hr

ஒருமுறை முழுதாக சார்ஜ் செய்தால் 160km பயணிக்கலாம்.

முழுமையாக சார்ஜ் ஏற 8 மணி நேரம் தேவைப்படும்.

விலைதான் கூடுதலாக இருக்கலாம் என நினைகின்றனர் எதிர்பார்க்கப்படும் விலை 4.5 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம்.

Exit mobile version