மாருதி எஸ் கிராஸ் வெற்றி பெறுமா ? – விமர்சனம்

மாருதி சுசூகி எஸ் கிராஸ் கார் வரும் ஆகஸ்டு 5ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள மாருதி எஸ் கிராஸ் எப்படி இருக்கும் வெற்றி பெறுமா என்பதை பற்றி எஸ் கிராஸ் கார் விமர்சனம் செய்தி தொகுப்பில் கானலாம்.
மாருதி சுசூகி எஸ் கிராஸ்
மாருதி சுசூகி எஸ் கிராஸ்

மாருதி சுசூகி எஸ் கிராஸ்

மாருதி நெக்ஸா பிரிமியம் டீலர்கள் வழியாக விற்பனைக்கு வரவுள்ள மாருதி எஸ் கிராஸ் காரில் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

தோற்றம்

சுசூகி எஸ்எக்ஸ்4 காரினை அடிப்படையாக கொண்ட இந்த கிராஸ்ஓவர் ரக கார் இந்தியாவில் எஸ் கிராஸ் என்ற பெயரிலே விற்பனைக்கு வரவுள்ளது. எஸ் கிராஸ் கார் கிராஸ்ஓவர் ரக மாடல் என்பதற்கேற்ப பாடி கிளாடிங் , வீல் ஆர்ச் , ரூஃப் ரெயில்கள் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

முகப்பில் இரண்டு குரோம் பட்டைகளுக்கு மத்தியில் சுசூகோ லோகோ பதிக்கப்பட்டுள்ளது. பாடி முழுதும் கருப்பு நிற பாடி கிளாடிங் மற்றும் கொண்டுள்ளது. பின்புற தோற்றமும் சிறப்பாக அமைந்துள்ளது.

பக்கவாட்டில் 16 இஞ்ச் ஆலாய் வீலை பெற்றுள்ளது. முகப்பில் எஃஐடி தானியங்கி முகப்பு விளக்குகள் , பனி விளக்கு அறையில் குரோம் பூச்சூ என கிராஸ்ஓவர் ரக மாடல்களில் சற்று பிரிமியம் ரக காராக எஸ் கிராஸ் திகழ்கின்றது.

நீலம் , பிரவுன் , வெள்ளை , கிரே மற்றும் சில்வர் என 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறம்

மிக அருமையாக ஃபினிஷ் கொண்ட ஸாஃப்ட் டச் டேஸ்போர்டு , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பின் உதவியுடன் பூளூடூத் தொடர்பு , ஸ்மார்ட் போன் தொடர்பு போன்றவற்றை பெற்று கொள்ளமுடியும்.

மேலும் எரிபொருள் அளவு , டிரிப் மீட்டர் , எரிபொருள் ரேஞ்ச் , மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலில் பல தொடர்புகளை கட்டுப்படுத்தும் பொத்தான்கள் என பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது.,

என்ஜின்

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களை எஸ் கிராஸ் காரில் பயன்படுத்தபட்டுள்ளது.

DDiS 200 என்ற பெயரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 89பிஎச்பி ஆற்றல் மற்றும் 200என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
DDiS 320 என்ற பெயரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 118பிஎச்பி ஆற்றல் மற்றும் 320என்எம் டார்க்கையும் தரவல்லது. 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி எஸ் கிராஸ் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.65கிமீ மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 22.7கிமீ ஆகும்

எஸ் கிராஸ் சிறப்பம்சங்கள்

தொடுதிரை அமைப்பு , தானியங்கி முகப்பு விளக்கு , மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர் , லெதர் அப்ஹோல்சரி , ரிவர்ஸ் கேமரா , பார்க்கிங் சென்சார்  மற்றும் நேவிகேஷன் அமைப்பு போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

எஸ் கிராஸ் பாதுகாப்பு வசதிகள்

முன் மற்றும் பின் பக்கங்களில் டிஸ்க் பிரேக் , முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் பிரேக் போன்ற வசதிகள் உள்ளன.

எஸ் கிராஸ் வேரியண்ட்கள்

மொத்தம் 5 வேரியண்டில் 8 விதமான வரிசைகளில் எஸ் கிராஸ் வரவுள்ளது. சிக்மா , சிக்மா (O) , டெல்டா , ஜெட்டா , மற்றும் ஆல்ஃபா ஆகும். இவற்றில் 1.3 லிட்டர் DDiS 200 என்ஜின் அனைத்து வேரியண்டிலும் டாப் வேரியண்ட்களாக டெல்டா , ஜெட்டா , மற்றும் ஆல்ஃபா போன்றவற்றில் 1.6 லிட்டர் DDiS 320 என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மேலும் வாசிக்க S கிராஸ் வேரியண்ட் முழுவிபரம்

போட்டியாளர்கள்

எஸ் கிராஸ் காருக்கு போட்டியாக எலைட் ஐ20 ஏக்டிவ் , க்ரெட்டா , ஈக்கோஸ்போர்ட் டஸ்ட்டர் மற்றும் டெரோனோ போன்ற எஸ்யூவிகளும் எதிர்கொள்ளும்.

எஸ் கிராஸ் விலை என்ன

எஸ் கிராஸ் விலை ரூ. 7.50 லட்சம் தொடங்கி 11 லட்சத்திற்க்குள் இருக்கும்.

மாருதி எஸ் கிராஸ் வெற்றி பெறுமா ?

மாருதி நெக்ஸா டீலர் வழியாக மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள எஸ் கிராஸ் மாருதி நிறுவனத்தின் பிரிமியம் ரக கார்களில் புதிய நுழைவாக அமைய உள்ளது.

மாருதி வலுவான சேவை பெற்றுள்ளதால் சவலான விலை சிறப்பான செயல்திறன் மற்றும் புதிய அனுபவத்தினை தரவல்ல எஸ் கிராஸ் நல்ல விற்பனை எண்ணிக்கை பதிவு செய்யும்.

மாருதி சுசூகி S கிராஸ்

Maruti S-Cross detailed Review

Exit mobile version