மாருதி சியாஸ் ஹைபிரிட் முழுவிபரம் வெளியானது

மாருதி சுஸூகி சியாஸ் எஸ்எச்விஎஸ் கார் நாளை விற்பனைக்கு வரவுள்ள நிலையில் முழுமையான விவரங்கள் வெளிவந்துள்ளது. மாருதி சியாஸ் ஹைபிரிட் கார் மைலேஜ் லிட்டருக்கு 28.09கிமீ ஆகும்.
மாருதி சியாஸ் ஹைபிரிட் 

மாருதி சுசூகி நிறுவனம் முதன்முறையாக தனது கார்களில் ஹைபிரிட் நுட்பத்தினை புகுத்தி விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. நாளை விற்பனைக்கு வரவுள்ள சியாஸ் காரை தொடர்ந்து அக்டோபரில் வரவுள்ள  புதிய எர்டிகா காரிலும் SHVS நுட்பத்தினை பொருத்த உள்ளது.

மாருதி சியாஸ் SHVS வேறு எந்தவிதமான தோற்றம் மற்றும் உட்புற மாற்றங்களும் கிடையாது. பின்புறத்தில் மட்டும் SHVS பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் மாடலில் எந்த மாற்றங்களும் இல்லை.

வரவிருக்கும் புதிய சியாஸ் ஹைபிரிட் காரில் DDiS 200 அதாவது 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 88.5எச்பி ஆகும். இதன் முறுக்குவிசை 200 என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி சியாஸ் SHVS கார் மைலேஜ் லிட்டருக்கு 28.09கிமீ ஆகும். சியாஸ் பெட்ரோல் மைலேஜ் மெனுவல் லிட்டருக்கு 20.73கிமீ மற்றும் தானியங்கி 19.12கிமீ ஆகும்.

முந்தைய சாதரன டீசல் மாடல்களை முற்றிலும் நீக்கப்பட்டு புதிய SHVS மாடல் மட்டுமே இனி விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் கூடுதலாக Vxi (O) Vdi (O) ஆப்ஷனல் வேரியண்ட்கள் இணைக்கப்பட்டுள்ளது.

  Vxi (O) Vdi (O) ஆப்ஷனல் வேரியண்டில் ஏபிஎஸ் , முன்பக்க ஓட்டுநர் மற்றும் பயணிக்கான காற்றுப்பைகள் இனைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சியாஸ் எஸ்எச்விஎஸ் Vdi, Vdi (O), Vdi+, Zdi மற்றும் Zdi+ வேரியண்டில் கிடைக்கும்.

மேலும் படிக்க ; மாருதி சுசூகி சியாஸ் SHVS நுட்பம் முழுவிபரம்

சாதரன டீசல் மாடலை விட ரூ.15 ,000 முதல் ரூ 30,000 வரையிலான கூடுதல் விலையில் நாளை அதிகார்வப்பூர்வமாக மாருதி சியாஸ் விற்பனைக்கு வருகின்றது.

Maruti Suzuki Ciaz SHVS details

Exit mobile version