Automobile Tamilan

மஹிந்திராவின் இருசக்கர அவதாரம் : ஜாவா , பிஎஸ்ஏ , பீஜோ

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இருசக்கர வாகன சந்தையில். பைக்குகள் , ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் கிளாசிக் நிறுவனங்களான பிஎஸ்ஏ மற்றும் ஜாவா பிராண்டில் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.

கைனெட்டிக் மோட்டார் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர் இருசக்கர வாகன சந்தையில் நுழைந்த மஹிந்திரா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிக கடுமையாகவே இருசக்கர வாகன சந்தையில் வெற்றி பெற போராடி வருகின்ற நிலையில் மோஜோ பைக்கின் அறிமுகத்திற்கு பின்னர் பிரிமியம் ரக சந்தையில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் வாயிலாக பிரசத்தி பெற்ற கிளாசிக் ரக பாரம்பரிய பைக் தயாரிப்பாளர்களான இங்கிலாந்தின் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் , செக் குடியரசின் ஜாவா பைக் நிறுவனங்களை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளது.

ஜாவா மோட்டோ

1920 முதல் பைக்குகளை தயாரித்து வரும் ஜாவா நிறுவனம் இந்தியாவில் 1960 ஆம் ஆண்டில் ஐடியல் ஜாவா என்ற பெயரில் 250சிசி பைக்குகளை கிளாசிக் வடிவத்தில் மிக நேர்த்தியான தரம் , வடிவம் மற்றும் சிறப்பான எஞ்சின் சப்தம் போன்றவற்றால் இந்தியர்களின் மிக விருப்பமான பிராண்டாக வலம் வந்தது. 1985க்கு பிறகு மிக வேகமாக வளர்ந்த இருசக்கர வாகன சந்தையில் குறைந்த சிசி கொண்ட குறைந்த விலை பைக்குகள் , பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் வரவு போன்ற காரணங்களால் சந்தை மதிப்பினை இந்தியாவில் இழந்த  ஜாவா 1990 களில் தனது விற்பனை நிறுத்திக்கொண்டது.

மஹிந்திரா வசம் வந்துள்ள ஜாவா பிர்ராண்டிலே கிளாசிக் வடிவ மாடல்களை நவீன நுட்ப வசதிகளுடன் இணைத்து புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

இங்கிலாந்து நாட்டின் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனம் கிளாசிக் ரக வடிவமைப்பில் பாரம்பரிய பைக்குகளை தயாரிப்பதில் பிரசத்தி பெற்ற நிறுவனமாக விளங்கி வரும் பிஎஸ்ஏ நிறுவன சந்தைகளான இங்கிலாந்து ,  ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, மற்றும் கனடா போன்ற நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது.

நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் பிஎஸ்ஏ பைக்குகளை புதுப்பித்து விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் பிஎஸ்ஏ பிராண்டில் சைக்கிள்கள் விற்பனையில் உள்ளதால் பைக்குகள் வர வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.

பீஜோ மோட்டார்சைக்கிள்ஸ்

பிரான்ஸ் நாட்டின் பீஜோ நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம் கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பெஜோ ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்திருந்தாலும் இந்தியாவில் பீஜோ மாடல்களை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

peugeot-django

மோஜோ

மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவில் வெளியாகி முதல் பிரிமியம் ரக தொடக்கநிலை மாடலான மோஜோ சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் கம்யூட்டர் சந்தையில் உள்ள செஞ்சுரோ மற்றும் ஸ்கூட்டர் சந்தையில் உள்ள கஸ்ட்டோ போன்ற மாடல்கள் போட்டியாளர்களுக்கு மத்தியில் பெரிதாக வரவேற்பினை பெற தவறியுள்ளது. எனவே தன்னுடைய செயல்திறனை பிரிமியம் சந்தையில் முழுதாக செலுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிகின்றது.

மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவில் புதியதோர் தொடக்கத்தை மஹிந்திரா ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதால் அடுத்த சில வருடங்களில் 200சிசி முதல் 350சிசி வரையிலான சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Exit mobile version