Automobile Tamilan

கிராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த மேட் இன் இந்தியா டஸ்ட்டர்

இந்தியாவில் சிறப்பான வரவேற்பினை பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மேட் இன் இந்தியா ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி கார் சர்வதேச கிராஷ் டெஸ்ட் சோதனையில் ஏர்பேக் இல்லாத மாடல் 0 மதிப்பை பெற்று தோல்வியடைந்துள்ளது.

மேட் இன் இந்தியா டஸ்ட்டர்

ரெனோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்ற டைகா அடிப்படையிலான டஸ்ட்டர் எஸ்யூவி காரை பாதுகாப்பான இந்திய கார்கள் 2017 (#SaferCarsforIndia2017) திட்டத்தின் கீழ் குளோபல் என்சிஏபி மையம் சோதனை செய்துள்ளது.

குளோபல் என்சிஏபி சோதனைகள் முன்பக்க மோதலின் பொழுது மணிக்கு64 கிமீ வேகத்தில் மோதி சோதனை செய்யப்படுகின்றது. வருகின்ற அக்டோபர் 2017 முதல் இந்தியாவில் பாரத் கிராஷ் டெஸ்ட் என்ற பெயரில் முன்பக்க மோதிலின் பொழுது மணிக்கு 56 கிமீ வேகத்தில் மோதும் வகையிலான சோதனை முறைகள் உருவாக்கப்பட உள்ளது.

சோதனை செய்யப்பட்ட மாடல் புதிய டஸ்ட்டர் காரை அடிப்படையாக கொண்டதாகும், ஏர்பேக் எனும் இரண்டாம் பட்ச காற்றுப்பைகள் இல்லாத பேஸ் வேரியண்ட் டஸ்ட்டர் சோதனையின் பொழுது வயது வந்தோர் பாதுகாப்பில் பூஜ்யம் மதிப்பீட்டை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 2 தர நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது.

அடுத்தகட்டமாக இரண்டாவது சுற்றில் ஒற்றை காற்றுப்பை பெற்ற நடுத்தர RXE  வேரியன்டை சோதனை செய்த பொழுது வயது வந்தோர் பாதுகாப்பில் 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. ஆனால் பின்பக்க இருக்கை குழந்தைகள் பாதுகாப்பில் 2 தர நட்சத்திர மதிப்பீட்டை தொடர்ந்து பெற்றது.

 

ஆனால் கடந்த 2015 ல் சோதனை செய்யப்பட்ட மேட் இன் கொலம்பியா டஸ்ட்டர் ஒற்றை காற்றுப்பை வேரியன்ட் லத்தின் என்சிஏபி சோதனையில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும். இதற்கு காரணம் இந்திய மாடலில் பொருத்தப்பட்டுள்ள காற்றுப்பை கொலம்பியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டஸ்ட்டர் மாடலை விட சிறியதாக அமைந்துள்ளதால்,  நெஞ்சு மற்றும் தலை பகுதிகளை பாதுகாக்கின்ற வகையில் உள்ளது. ஆனால் இந்திய மாடல் சிறப்பான பாதுகாப்பினை வழங்கவில்லை என சர்வதேச என்சிஏபி குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version