Site icon Automobile Tamilan

ரிலையன்ஸ் ஜியோ ஆட்டோமொபைல் டெலிமேட்டிக்ஸ் ?

ரிலையன்ஸ்  ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை வழங்கி வருகின்ற ரிலையன்ஸ் நிறுவனம் தற்பொழுது ஆட்டோமொபைல் சார்ந்த டெலிமேட்டிக்ஸ் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியோ கார்

ஜியோ 4ஜி சேவையில் ஜியோ ம்யூசிக் , ஜியோ நியூஸ் போன்றவற்றை போல ஜியோ கார் என்ற பெயரில் ஆப்ஸ் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதன் வாயிலாக ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்களில் ஆட்டோமொபைல் சார்ந்த ஜியோ டெலிமேட்டிக்ஸ் கருவியை இணைத்து கொண்டால் காரின் எரிபொருள் அளவு , கார் இருப்பிடம் , கார் வேகம் , காரினை கட்டுப்படுத்தும் அமைப்புகள் , வைபை போன்ற பல சேவைகளை இந்த டெலிமேட்டிக்ஸ் வழங்கும்.

ஜியோ சிம் கொண்டு இயங்கும் வகையில் இந்த கருவியை ரிலையன்ஸ் வடிவமைத்து வருகின்றது. இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் பல்வேறு தகவல்களை விரைவாகவும் துள்ளியமாகவும் பெற வாய்ப்புகள் உள்ளது.  இந்த கருவி விலையை ஜியோஃபை போன்றே ரூ.2000 விலையில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் 31 , 2016 வரையிலான காலகட்டத்தில் 7.24 கோடி ஜியோ வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும் மார்ச் 31, 2017 க்குள் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற திட்டமிட்டுள்ளது. முன்னணி மெட்ரோ நகரங்களில் விரைவில் ஃபைபர் டூ ஹோம் திட்டத்தை ஜியோ தொடங்கியுள்ளது.

இதே போன்ற சேவையை பள்ளி வாகனங்களுக்கு டாடா நிறுவனம் ஸ்கூல்மேன் என்ற பெயரில் வழங்கி வருவது குறிப்பிடதக்கதாகும்.

Exit mobile version