Automobile Tamilan

ரேங்லர் , கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி செப்.1 முதல் : ஜீப்

வருகின்ற செப்டம்பர் 1ந் தேதி ஃபியட் கிறைசலர் குழுமத்தின் அங்கமான ஜீப் பிராண்டு இந்தியாவில் ஜீப் ரேங்லர் , ஜீப் கிராண்ட் செரோக்கீ மற்றும் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது.

jeep-auto-expo-2016

ஆகஸ்ட் 31 மற்றும் செப்ட்ம்பர் 1 ஆகிய இரு தேதிகளிலும் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியின் வாயிலாக இந்தியாவில் ஜீப் பிராண்டு நேரடியான விற்பனையை தொடங்க உள்ளது. 75 ஆண்டுகள் பாரம்பரிய பெருமையை கொண்டுள்ள ஜீப் நிறுவனம் மூன்று எஸ்யூவி கார்களையும் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.

ஜீப் ரேங்லர் அன்லிமிடேட்

ஜீப் ரேங்லர் அன்லிமிடேட் (Jeep Wrangler) எஸ்யூவி கார் மிக சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தினை வழங்கவல்ல எஸ்யூவிகாராக விளங்கும். அதிக வீல்பேஸ் கொண்ட 4 கதவுகளை பெற்றுள்ள ரேங்கலர் அன்லிமிடேட் மாடல் 197 bhp ஆற்றலை வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. 2 கதவுகள் கொண்ட குறைந்த வீல்பேஸ் மாடல் தாமதமாக வெளிவரலாம்.

ஜீப் கிராண்ட் செரோக்கீ

சிறப்பான வசதிகளை கொண்ட சூப்பர் எஸ்யூவி காராக விளங்கும் ஜீப் கிராண்ட் செரோக்கீ (Jeep Grand Cherokee ) எஸ்யூவி காரில் லிமிடேட் மற்றும் சம்மீட் என இரு வேரியண்ட்களில் வரலாம். 237 bhp ஆற்றலை வழங்கும்  3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 570 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக்  II  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.  இரு வேரியண்டிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தினை பெற்றுள்ளது.

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி

மிகவும் சக்திவாய்ந்த பவர்ஃபுல்லான எஸ்யூவி கார் மாடலாக வரவுள்ள  ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி (Jeep Grand Cherokee SRT) காரில் 461 bhp ஆற்றலை வழங்கும் 6.4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 624Nm ஆகும். இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக் ஏக்டிவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இந்த என்ஜினில் ஈக்கோ மோட் வாயிலாக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை பெற இயலும்.

இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் ஜீப் எஸ்யூவிகள் உற்பத்தி செய்ய ஃபியட் திட்டமிட்டு வருகின்றது. தொடக்கநிலை காம்பேக்ட் ரக ஜீப் சி எஸ்யூவி இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

Exit mobile version