Automobile Tamilan

விடுமுறை கால பயணத்துக்கு திட்டமிட வேண்டிய அவசியம் என்ன ?

குறிப்பாக வார இறுதிநாட்கள் மற்றும் திங்கட்கிழமை போன்ற நாட்களிலும் கூடுதல் விடுமுறை தேதிகளில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட தென்னக நகரங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில் எவ்வாறு சிரமத்தை தவிர்க்கலாம் என அறிந்து கொள்ளலாம்.

விடுமுறை கால பயணம்

பொதுவாக தனிநபர் வாகனங்களை பயன்படுத்தும் பெரும்பாலானருக்கு போக்குவரத்து நெரிசலை தவிர வேறு எவ்விதமான சிரமங்களும் பெரிதாக எதிர்கொள்வதில்லை என்றாலும், பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் , வாகன பராமரிப்பு போன்றவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை தருவது மிக அவசியமாகின்றது.

பொதுபோக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள்

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் பொதுவாகவே கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை என்பதனால் தங்கள் உடைமைகள் முதல் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யபடும் என்பதனால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஆம்னி பேருந்துகள்

பெரும்பாலும் ஆம்னி பேருந்து சேவையில் முன்னணியாக உள்ள நிறுவனங்களுக்கு பிரத்தியேக இணையதளம் மற்றும் ஆப்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொண்டால் அதிகப்படியான கட்டண கொள்ளையிலிருந்து தவிர்க்கலாம்.

ஆம்னி பேருந்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார் . அதற்காக இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1800-425-6151 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயணிகள் கட்டணம் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம்.

ரயில் சேவை

வயது முதிர்ந்தவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலருக்கும் மிகவும் சௌகரியமான அமைகின்ற ரயில் போக்குவரத்து சேவையில் வருகின்ற விடுமை கால முன்பதிவு அனைத்தும் காலியாகிவிட்டது. ஜென்ரல் கம்பார்ட்மென்ட் பற்றி நமக்கு சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை.

ஜென்ரல் பயணிகள் படிகளில் நிற்பதனை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

பைக் ரைடர்கள்

நீண்ட கால விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பயணத்தை மேற்கொறள்ளும் முன் இருசக்கர வாகன ஓட்டிகள் முறையான சர்வீஸ் , டயர் அழுத்தம், பிரேக் உள்ளிட்ட அம்சங்களை மிகுந்த கவனத்தை கொண்டிருப்பது அவசியமாகும்.

குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களான தலைக்கவசம், பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் ரைடிங் கியர் ஆக்செரிஸ்களை அணிவது மிகவும் அவசியமானதாகும். எக்காரணத்துக்காவும் தலைக்கவசத்தை புறக்காணிக்காதீர்கள்.

மேலும் நள்ளிரவு நேரங்களில் பயணத்தை மேற்கொள்ளும் அன்பர்கள் சராசரி வேகத்துக்கு மிக குறைவான வேகத்தில் பயணத்தை தொடருங்கள்.

கார் ஓட்டிகள்

கார் ஓட்டுநர்களை பொறுத்தவரை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாக இருக்கை பட்டை (சீட் பெல்ட்) டிரைவர் மட்டுமல்லாமல் பயணிகளும் அணிவது அவசியமாகும். வாகனத்தை முறையான கால இடைவெளியில் சர்வீஸ் செய்வதனால் எதிர்பாரமல் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும், நடுவழியில் நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது.

நள்ளிரவு பயணங்களுக்கு விளக்குளையும், வேகத்தையும் முறையாக பராமரியுங்கள்.

பயணங்கள் இனிதாக அமைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களுடன் ஆட்டோமொபைல் தமிழன் இணையதளம்..!

Exit mobile version