Home Auto News

விஷன் மெர்சிடிஸ்-மேபக் 6 கான்செப்ட் கார் அறிமுகம்

அட்டகாசமான வடிவமைப்பினை கொண்ட 5.7 மீட்டர் நீளமுள்ள விஷன் மெர்சிடிஸ்-மேபக் 6 சொகுசு கூபே கான்செப்ட் எலக்ட்ரிக் கார் மாடல் கலிபோர்னியா மொண்டேரே கார் வார விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள விஷன் மெர்சிடிஸ்-மேபக் 6 கான்செப்ட் கார் வடிவமைப்பில் மட்டுமல்ல ஆற்றிலிலும் 748.23 hp வெளிப்படுத்தும் 80kWh லித்தியம் ஐயன் பேட்டரி வாயிலாக 4 எலக்ட்ரிக் மோட்டார்களை கொண்டு இயங்கும் வகையில் அதிகபட்சமாக 500 கிமீ வரை பயணிக்கும் வகையிலான கான்செப்ட் மாடலாக வெளிவந்துள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் . அதிகபட்ச வேகம் 250 கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

Mercedes-Maybach-Vision-6-interior-1

கடந்த பிராங்பர்ட் மோட்டார் ஷோ அரங்கில் வெளிவந்த ஐஏஏ (IAA – Intelligent Aerodynamic Automobile ) டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாக கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள மேபக் 6 கான்செப்டில் மிக நீளமான பானெட் , நேர்த்தியான முகப்பு பம்பருடன் செங்குத்தான கிரிலுடன் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பாரம்பரிய 3 பாயின்ட் கொண்ட மெர்சிடிஸ் லோகோ , எல்இடி முகப்பு விளக்கு , பக்கவாட்டில் கதவு கைப்பிடிகள் மேற்கூரைக்கு கீழாக அமைந்துள்ளது , 24 இன்ச் அலாய் வீல் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு பெற்றுள்ளது.

உட்புறத்தில் விஷன் மேபக் 6 மாடலில் 360 டிகிரி கோணத்திலான வசதிகளுடன் நேர்த்தியான டேஸ்போர்டு , தன்னாட்சி காராகவும் , மெனுவல் டிரைவுக்கு ஏற்ற வகையில் மாறிக்கொள்ளும் டேஸ்போர்டு என அசத்தலாக விளங்குகின்றது.

விஷன் மெர்சிடிஸ்-மேபக் 6 படங்கள்

Exit mobile version