ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி விரைவில்

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி  கார் மிக விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. க்ரெட்டா எஸ்யூவி இறுதிகட்ட சோதனையில் உள்ளது.

இந்திய சந்தையின் எஸ்யூவி சந்தையில் அடுத்தடுத்து புதிய காம்பேக்ட ரக கார்கள் சந்தையை புரட்டி போட வரவிருக்கின்றன. அந்த வகையில் வரவிருப்பவை மஹிந்திரா எஸ்101 , ஐஎக்ஸ்25 , மாருதி சுசூகி எக்ஸ்ஏ ஆல்ஃபா , ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் டொயோட்டா ரஷ் எஸ்யூவி ஆகும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

க்ரேட்டா காம்பேக்ட் எஸ்யூவி மிகவும் சிறப்பான இடவசதி மற்றும் மிரட்டலான தோற்றத்தில் விளங்கும். கூடுதலான இடவசதி தரும் வகையில் இதன் வீல்பேஸ் அமைந்திருக்கும். 
எலைட் ஐ20 காரில் பயன்படுத்தப்பட்ட அதே 1.4 லிட்டர் டீசல் என்ஜின் இதிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகின்றது. மேலும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் பயன்படுத்த உள்ளனர்.
பெட்ரோலில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் என்ஜினுடன் 6 வேக கியர்பாக்ஸ் மேலும் தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கபெறும். மேலும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.
முகப்பில் மிக நேர்த்தியுடன் கூடிய புராஜெக்டர் முகப்பு விளக்குகளில் பகல்நேர எல்இடி விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகளிலும் எல்இடி இருக்கலாம்.
உட்புறத்தில் பெரும்பாலான பாகங்களை எலைட் ஐ20 காரில் உள்ளதை பெற்றிருக்கலாம் என தெரிகின்றது. மேலும் இரட்டை வண்ணங்களில் டேஸ்போர்டு ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும்.
தொடுதிரை இன்ஃபோன்டெயின்மென்ட் அமைப்பு , தானியங்கி சூழ்நிலை கட்டுப்பாடு , இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் போன்ற வசதிகள் இருக்கும். 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனிலும் வெளிவரலாம் என தெரிகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா விலை விபரம்

updated
ஹூண்டாய் க்ரெட்டா என்ற புதிய பெயரினை ஹூண்டாய் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. வரும் ஆகஸ்ட மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும். ஐஎக்ஸ் விலை ரூ.8 லட்சம் முதல் 13 லட்சத்திற்க்குள் இருக்கும்.
Exit mobile version