Automobile Tamilan

ஹோண்டா அமேஸ் கார் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ

ஹோண்டா நிறுவனத்தின் பிரியோ ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட ஹோண்டா அமேஸ் செடான் வருகிற ஏப்ரல் 11 வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ்
ஹோண்டா அமேஸ் செடான் கார் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் ஹோண்டா அமேஸ் செடான் கார் மாருதி ஸ்விப்ட் டிசையர் காருக்கு மிக கடுமையான சவாலினை தரலாம். மாருதியின் வளமையான நெட்வெர்க் மற்றும் சர்வீஸ் போன்றவற்றுடனும் ஹோண்டா போட்டியிட வேண்டி வரும்.
ஹோண்டா அமேஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் i-VTec பொருத்தப்பட்டிருக்கும் 88.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த கூடிய எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் காரில் 1.5 லிட்டர்  i-Dtec எர்த் டிரீம்ஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 98.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த கூடிய எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 220 என்எம் டார்கினை வெளிப்படுத்தும்.
ஹோண்டா அமேஸ் காரின் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 26 (25.4)கிமீ  தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (மைலேஜ் தகவல் economictimes)
ஹோண்டா அமேஸ் கார் ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் காரினை விட கூடுதலாக 26 கிலோ தான் உள்ளதாம்.
டிசையர் காரினை விட கூடுதலான மைலேஜ் மற்றும் ஆற்றல் போன்ற காரணங்கள் ஹோண்டா அமேஸ் காருக்கு பக்க பலமாக அமையும். அமேஸ் டீசல் டாடா இன்டிகா இசிஎஸ் காருக்கும் சவாலினை தரலாம்.
அமேஸ் கார் உற்பத்தினை ஹோண்டா தொடங்கிவிட்டது. அதனால் மிக விரைவாக டெலிவரி செய்யலாம்.ஹோண்டா அமேஸ் கார் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 5.75 லட்சம் முதல் இருக்கலாம்,
Exit mobile version