ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனத்தின் ஹோண்டா சிபிஎஸ் எனப்படும் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் (Combi-Braking system – CBS) கொண்ட ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் விற்பனை 1 கோடி இலக்கினை கடந்து புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியான ஹோண்டா காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் 7 வருடங்களில் 1 கோடி வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ள நிலையில் தற்பொழுது ஹோண்டா சிபிஎஸ் ஆக்டிவா 3ஜி , ஆக்டிவா 125 , ஆக்டிவா-ஐ டியோ மற்றும் ஏவியேட்டர் ஸ்கூட்டர்கள் மற்றும் ஹோண்டா சிபி ஷைன் , சிபி ஷைன் எஸ்பி , சிபி யூனிகார்ன் 160 மற்றும் சிபி யூனிகார்ன் 160 ஆர் போன்ற பைக்குகளில் சிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா சிபிஎஸ் என்றால் என்ன ?
சிபிஎஸ் என்றால் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தின் வாயிலாக பிரேக்கினை இயக்கும்பொழுது முன் மற்றும் பின் என இரு பக்கங்களின் பிரேக்கும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு மிக குறைந்த தூரத்தில் வாகனத்தை நிறுத்த உதவும். சிபிஎஸ் அமைப்புடன் இணைந்த ஈக்வலைசர் உள்ளதால் பிரேக்கிங் செய்யும்பொழுது வாகனத்தின் நிலைப்பு தன்மையில் எவ்விதமான பாதிப்பிகளும் ஏற்படாத வகையில் சிபிஎஸ் அமைப்பு செயல்படும். சிபிஎஸ் நுட்பம் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக இருசக்கர வாகனங்களில் உள்ளது.
ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்