1.41 லட்சம் பேர் விபத்தில் உயிரிழப்பு – அதிர்ச்சி ரிபோர்ட்

கடந்த 2014ம் வருடத்தில் மட்டும் ஏற்பட்ட 4.5 லட்ச விபத்துகளில் 1.41 லட்சம் பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 4.8 லட்சத்திற்க்கு மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர். மொத்த விபத்தில் தமிழகத்திற்க்கு இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.
விபத்து

தேசிய குற்ற பதிவு பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1. 2014ம் வருடத்தில் 1.41 லட்சம் பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

2. மொத்தம் ஏற்பட்ட விபத்துக்கள் 4.5 லட்சமாகும்.

3. காயமடைந்தோர் எண்ணிக்கை 4.81 லட்சத்திற்க்கு மேலாகும்.

4. 5 முன்னனி மாநிலங்கள் உத்திரப்பிரதேசம் , தமிழ்நாடு . மஹாராஷ்டிரா , கர்நாடகா மற்றும் ராஜஸ்தான். இந்த 5 மாநிலங்களின் பங்கு மொத்த விபத்தில் 40 % ஆகும்.

5. உத்திரப்பிரதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,284 மற்றும். தமிழகத்தில்  விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 ஆகும்.

6. அதிக உயிரிழந்தோர் முன்னனி நகரங்கள் டெல்லி , சென்னை , போபால் மற்றும் ஜெயப்பூர்

7.  கவனக்குறைவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49,000 ஆகும்.

8.  முந்துவதனால் (ஓவர்டேக்கிங்) உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,000 ஆகும்.

9. அதிக விபத்து இருசக்கரம் மற்றும் லாரிகளால் ஏற்படுகின்றதாம்.

10. 6 விபத்துகளில் 1 விபத்து குடியிருப்பு பகுதியிலும் , மொத்த விபத்தில் 5.43 % விபத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகாமையிலும் ஏற்ப்பட்டுள்ளது.

1 மணி நேரத்திற்க்கு 16 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்

மேலும் வாசிக்க; பைக் ஓட்டத்தெரியுமா ?

விபத்திற்க்கு காரணம்

கவனக்குறைவு , மது , அதிவேகம் , பயற்சியற்ற ஓட்டுநர்கள் போன்றவை முக்கியமான காரணம் என தேசிய குற்ற பதிவு பீரோ தெரிவித்துள்ளது.

Road Accident report in India – 2014

Exit mobile version