பைக் பராமரிக்க எளிமையான டிப்ஸ்

re-classic-350-bike

லட்சத்தில் விலை கொடுத்து வாங்கும் மோட்டார்சைக்கிள் தினமும் பராமரிக்க வேண்டிய அவசியமான 10 பைக் பராமரிப்பு குறிப்புகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.

1) டயர் அழுத்தம்: நல்ல சிறப்பான நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உங்கள் மோட்டார் சைக்கிளின் டயர் அழுத்தம் சரியாக இருக்கின்றதா என்பதனை தினமும் உறுதி செய்யவும்.

2) ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்: உங்கள் பைக்கின் என்ஜின் இயங்குவதற்கும் மிக சிறப்பான வகையில் உராய்வு மற்றும் தேவையற்ற செலவுகளை குறைக்க முறையாக தயாரிப்பாளர் கொடுத்த கால அட்டவனையில் என்ஜின் ஆயில் மற்றும் ஃபில்டரை மாற்றுவது மிக முக்கியமாகும்.

3) பிரேக் பராமரிப்பு: இருசக்கர வாகனத்தின் பிரேக் சரியாக செயல்படுகின்றனவா என்பதையும், பிரேக் பேடுகள் மற்றும் பிரேக் ஃப்ளூயூட் நல்ல நிலையில் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

4) செயின் லூப்: பவரை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்லும் செயின் மிகவும் முக்கியமாக தொடர்ந்து லூபிரிக்கேஷன் செய்து அதிகப்படியான தேய்மானம் தடுக்கவும் அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது.

5) ஏர் ஃபில்டர்: நல்ல காற்றோட்டத்தை உறுதிசெய்யவும், என்ஜின் சேதத்தைத் தடுக்கவும் உங்கள் மோட்டார்சைக்கிளின் ஏர் ஃபில்டர் சுத்தமாகவும், குப்பைகள் இல்லாமல் இருப்பதையும் உறுதிசெய்யவும்.

6) பேட்டரி சரிபார்க்க: உங்கள் மோட்டார்சைக்கிளின் பேட்டரி நல்ல நிலைமையில் இருப்பதனை, முழுமையாக சார்ஜ் உள்ளதா என்பதனை பைக்கை தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றால் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

7) சஸ்பென்ஷன் பரிசோதிக்கவும்: சஸ்பென்ஷன் அமைப்புகளை சரியாக வேலை செய்கிறதா மற்றும் ஆயில் கசிவுகள் அல்லது சேதம் எதுவும் இல்லை என்பதை சோதிக்கவும்.

8) ஹெட்லைட் சரிபார்க்க: உங்கள் மோட்டார்சைக்கிளின் ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர் என அனைத்தும் சரியாக வேலைசெய்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

9) பைக் சுத்தம் செய்க: வழக்கமாக சுத்தம் செய்தல் மற்றும் வேக்ஸ் உள்ளிட்டவை பயன்படுத்தி உங்கள் மோட்டார் சைக்கிளை அழகாக பராமரிப்பதுடன் துரு அரிப்பைத் தடுக்க பெரிதும் உதவுகின்றது.

10) இடத்தை பராமரிக்க: உங்கள் மோட்டார் சைக்கிளை நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தவில்லை என்றால், உலர்ந்த மற்றும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவும்.

Exit mobile version