100 கூகுள் வேமோ தானியங்கி கார்கள் தயார்

உலகின் முன்னனி இணைய ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தின் 100 வேமோ தானியங்கி கார்கள் தயார்நிலையில் உள்ளதாக கூகுள் வேமோ தெரிவித்துள்ளது. ஃபியட் கிறைஸ்லர் பசுஃபிகா மினிவேன் வாயிலாக முதன்முறையாக தானியங்கி கார்கள் உற்பத்தி நிலையை எட்டியுள்ளது.

எஃப்சிஏ (FCA) மற்றும் வேமோ கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள 100 பசுஃபிகா ஹைபிரிட் மினிவேன்கள் மிக நவீனத்துவமான வேமோ தானியங்கி கார் இயங்கும் நுட்பத்தினை பெற்ற மாடலாக  அதிநவீன சென்சார்கள் , சிறந்த மேம்பாடுகளை கொண்டதாக விளங்குகின்ற வகையில் உற்பத்தி நிலை மாடல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தானியங்கி கார்

கடந்த ஒரு ஆண்டுகாலமாகவே பல்வேறு முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஃபியட் , ஜிஎம்  ஃபோர்டு ,ஆல்ஃபா ரோமியோ , மஸாராட்டி போன்ற நிறுவனங்களுடன் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக ஃபியட் குழுமத்தின் அங்கமான கிறைஸ்லர் கார்களில் முதன்முறையாக வருவது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது தயாரிப்பு மாடல்களாக வெளிவந்துள்ளது.

பொது போக்குவரத்து சாலைகளில் வருகின்ற 2017 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி நிலையில் சோதனை செய்யப்பட உள்ள வேமோ பசுஃபிகா வெறும் 6 மாதங்களில் கிறைஸ்லர் மற்றும் வேமோ கூட்டணியில் 100 கார்கள் உற்பத்தி நிலை மாடல்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கூகுள் வேமோ தானியங்கி கார்கள் அமெரிக்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது நிரூபனமாகியுள்ளது.

300 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் மனிதர்களின் வாகன ஓட்டுதல் அனுபவத்தை கூகுள் தானியங்கி கார்  கடந்த 7 ஆண்டுகளில் அதாவது 2009 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 32 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேலான பயண அனுபவம் மற்றும் 1 பில்லியன் மைல்கள் சிமிலேஷன் டிரைவிங் வாயிலாக கற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

வேமோ பசுஃபிகா கார் படங்கள்

Exit mobile version