Home Auto News

111 கீமி மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1-ஜெனிவா மோட்டார் ஷோ

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எக்ஸ்எல்1 கார் 83வது ஜெனிவா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் உற்பத்தி நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
geneva motor show 2013
1 லிட்டர் டீசலுக்கு 111 கீலோ மிட்டர் மைலேஜ் என்பதே இந்த ஹைபிரிட் எலெக்ட்ரிக் டீசல் காரின் நோக்கம் ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1 காரில் 48PS ஆற்றலை வெளிப்படுத்தும் 3 சிலிண்டர் TDi டீசல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர்.மேலும் கூடுதலாக 27PS ஆற்றலை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.7 ஸ்பீடு டிவல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.
ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1 காரில் உச்சக்கட்ட வேகம் மணிக்கு 160கீமி ஆகும்.12.7 விநாடிகளில் 100kph தொடும்.
இதன் 3888mm நீளம், 1665mm அகலம் மற்றும் 1153mm உயரம் ஆகும். எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் பொழுது அதிகப்பட்ச வேகம் 50kmph ஆகும். லித்தியம்-ஐன் பேட்டரி பயன்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து ஜெனிவா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் இடம் பெறும் கார்களின் விவரங்கள் வெளிவரும். இவைகளை தொடர்ந்து வாசியுங்கள்.. 
Exit mobile version