Home Auto News

இந்தியாவில் 20 வருடங்கள் ஹூண்டாய் மோட்டார்ஸ்

கடந்த மே 6,1996 ஆம் வருடத்தில் இந்தியாவில் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார்ஸ் சென்னை அருகே உள்ள ஶ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது. 1998 ஆம் ஆண்டு முதல் கார் உற்பத்தி தொடங்கப்பட்டது.

 

hyundai-india-20-years

 

தற்பொழுது 20 வருடங்களை கடந்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 10 மாடல்களுடன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளராக விளங்குகின்றது. மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் முன்னனி வகிக்கின்றது.

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மாடலான சான்ட்ரோ மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வெற்றி பெற்றது. தொடக்க நிலை சந்தையில் மிக சிறப்பான அடிதளத்தினை பெற்றுள்ள ஹூண்டாய் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ரூ.19,582 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 41,89,875 கார்கள் இந்திய சந்தையிலும், 23,56,805 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. முதன்முறையாக நிறுவனத்தின் வரலாற்றிலே கடந்த 2015-2016 நிதி ஆண்டில் 4,86,000 கார்களை விற்பனை செய்து 17.36 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  Y K KOO தெரிவிக்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கனவுகளை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தின் கனவுகள் தற்பொழுது நிஜமாகியுள்ளது. மேக் இன் இந்திய திட்டத்தின் கீழ் செயல்படுவதில் பெருமை கொள்கின்றது. மேலும் ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் இதயமாக ஹூண்டாய் இந்தியா செயல்பட்டு வருகின்றது. இந்திய வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு மிகப் பெரிய மகத்தான ஆதரவினை கொடுத்துள்ளனர்.

மேலும் படிங்க ; க்ரெட்டா எஸ்யூவி விபரம்

ஆண்டுக்கு 6 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன்  கொண்டுள்ள ஹூண்டாய் இந்திய தொழிற்சாலையில் அடுத்த சில வருடங்களில் உற்பத்தியை ஆண்டுக்கு 7,01,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

92க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  உள்நாட்டில் கார்களை சப்ளை செய்வதற்கும் சென்னை துறைமுகம் வழியாக குஜராத் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

ஹூண்டாய் கார் மாடல்கள்

  1. இயான்
  2. ஐ10
  3. கிராண்ட் ஐ10
  4. எக்ஸ்சென்ட்
  5. எலைட் ஐ20
  6. ஐ20 ஏக்டிவ்
  7. வெர்னா
  8. எலன்ட்ரா
  9. க்ரெட்டா
  10. சான்டா ஃபீ
Exit mobile version