Site icon Automobile Tamilan

2014யில் டிசி அவந்தி சூப்பர் கார்

இந்தியாவிலே உருவாகும் முதல் சூப்பர் காரான டிசி டிசைன் நிறுவனத்தின் டிசி அவந்தி கார் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிசி டிசைன் நிறுவனம் குஜாராத் மாநிலத்தில் ரூ 60 கோடி முதலீட்டில் ஆலையை கட்டமைக்க உள்ளனர். இந்த ஆலை இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ உற்பத்தியை தொடங்கும். இந்த ஆலையில் ஆண்டுக்கு சுமார் 3000 கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
DC Avanti
டிசி டிசைன் நிறுவனம் தயாரிக்கும் கார்களின் மாடல்கள் அனைத்துமே 4000 கார்கள் மட்டுமே தயாரிக்கும். மேலும் டிசி சூப்பர் கார்கள் அனைத்துமே 25 முதல் 30 லட்சத்திற்க்குள் இருக்கும். எனவே குறைவான விலையிலே சூப்பர் கார்கள் கிடைக்கும்.
டிசி அவந்தி சூப்பர் கார் மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லும். இதன் எஞ்சின் ஃபோர்டு 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்த ஆண்டு டில்லியில் நடக்கவுள்ள 2014 ஆட்டோ ஷோவில் டிசி எஸ்யூவி காரினை பார்வைக்கு வைக்க உள்ளது.
Exit mobile version