Automobile Tamil

டாப் 5 சூப்பர் ஹிட் எஸ்யூவி மாடல்கள் – ஃபிளாஷ்பேக் 2016

2016 ஆம் ஆண்டு முடிவடைய சில மணி நேரங்களே உள்ள நிலையில் இந்த வருடத்தில் ஆட்டோமொபைல் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த டாப் 5 சூப்பர் ஹிட் எஸ்யூவி மாடல்கள் பற்றி ஃபிளாஷ்பேக் 2016 பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

உலக அரங்கில் எஸ்யுவி ரக கார்களின் மோகம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய வாகன சந்தையில் விற்பனைக்கு வந்து அமோக ஆதரவினை பெற்று விளங்கும் மாடல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்திய பிரிமியம் எஸ்யூவி ரக சந்தையின் முடிசூடா மன்னாக விளங்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அமோக ஆதரவினை பெற்று 5000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளுடன் நெ.1 எஸ்யூவி கார் மாடலாக  டொயோட்டா ஃபார்ச்சூனர் விளங்குகின்றது.

மேலும் படிக்க ; ஃபார்ச்சூனர் எஸ்யூவி முழுவிபரம்

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வந்துள்ள ஃபார்ச்சூனர் முந்தைய தலைமுறை மாடலை விட ரூ. 3 லட்சம் வரை விலை கூடுதலாக அமைந்தாலும் தனது போட்டியாளர்களை வீழ்த்தியுள்ளது.

2. ஃபோர்டு எண்டேவர்

மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஃபோர்டு விற்பனைக்கு வந்த தொடக்கத்தில் அபரிதமான ஆதரவினை பெற்ற முந்தைய தலைமுறை ஃபார்ச்சூனரை சில மாதங்கள் பின்னுக்கு தள்ளியிருந்தாலும்  எண்டேவர் எஸ்யுவி பிடித்திருக்கும் இடம் இரண்டாவது ஆகும்.

மேலும் படிக்க ; எண்டேவர் எஸ்யூவி முழுவிபரம்

இரு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் அசத்தலான விலையில் பல்வேறு நவீன வசதிகளை பெற்றுள்ள மாடலாக எண்டேவர் வலம் வருகின்றது.

3. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

தொடக்கநிலை காம்பேக்ட் ரக எஸ்யுவி மாடல்களின் ஓட்டு மொத்த சந்தையை அசைத்துள்ள விட்டாரா பிரெஸ்ஸா மாருதி நிறுவனத்தை யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பில் முன்னிலை படுத்த காரணமாகியுள்ளது. மாதம் சராசரியாக 10,000 என்கின்ற விற்பனை இலக்கினை எட்டிவருகின்றது. 1.73 லட்சம் முன்பதிவுகளை எட்டியுள்ள விட்டாரா பிரெஸ்ஸா இந்த வருடத்தின் அசத்தலான எஸ்யுவி மாடலாக விளங்குகின்றது.

மேலும் படிக்க ; விட்டாரா பிரெஸ்ஸா முழுவிபரம்

மாருதியின் ஆஸ்தான 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கும். விட்டாரா பிரெஸ்ஸா காரில் பெட்ரோல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் 2017ல் வரலாம்.

4. ஜீப் எஸ்யூவிகள்

அமெரிக்காவின் பாரம்பரிய மிக்க உயர்தர சொகுசு பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் செரோக்கீ , ரேங்கலர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள ஜீப் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க ; ஜீப் எஸ்யூவிகள் முழுவிபரம்

விரைவில் பெட்ரோல் மாடல்களில் வரவுள்ள ஜீப் ரேங்கலர் மற்றம் புதிய ஜீப் காம்பஸ் விரைவில் இந்தியா வரவுள்ளது.

 5. ஹோண்டா பிஆர்-வி

காம்பேக்ட் ரகத்தில் நுழைந்துள்ள 7 இருக்கைகள் கொண்ட ஹோண்டா பிஆர்-வி சிறப்பான சாஃப்ட் ரோடு மாடலாக வந்து அசத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் முதல் தொடக்கநிலை எஸ்யுவி மாடலாக பிஆர்-வி விளங்குகின்றது.

மேலும் படிக்க ; ஹோண்டா பிஆர்-வி முழுவிபரம்

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்ற ஹோண்டா பிஆர்-வி காரில் சிவிடி ஆப்ஷனும் உள்ளது.

5. ஹூண்டாய் டூஸான்

5வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஹூண்டாய் டூஸான் நல்லதொரு ஆரம்பத்தை ஹூண்டாய்க்கு தந்துள்ளது. க்ரெட்டா வெற்றிக்கு பிறகு டூஸான் எஸ்யூவி காரை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் படிக்க ; ஹூண்டாய் டூஸான் முழுவிபரம்

Exit mobile version