2016 தக்‌ஷின் டேர் வெற்றியாளர்கள் – மாருதி சுசூகி மோட்டார்ஸ்போர்ட்ஸ்

0

மாருதி சுசூகி மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவின் 2016 தக்‌ஷின் டேர்  போட்டியில் அல்டிமேட் கார் பிரிவில் சுரேஷ் ரானா மற்றும் பர்மிந்தர் தக்கர் வெற்றி பெற்றுள்ளனர். அல்டிமேட் பைக் பிரிவில் நடராஜ் மற்றும் எண்டூரன்ஸ் கார்கள் பிரிவில் கேனேஷ்மூர்த்தி மற்றும் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளனர்.

maruti-suzuki-dakshin-dare-sports

Google News

கடந்த ஆகஸ்ட் 1 முதல் 6 வரை நடைபெற்ற 2016 தக்‌ஷின் டேர் மாருதி சுசூகி போட்டி பெங்களுரூ முதல் கோவா வரை 2200 கிலோமீட்டர் பயணத்தில் 5 நாட்களாக நடைபெற்ற முக்கிய அம்சங்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

dakshin-dare-map

கடந்த 30 ஜூலை 2016யில்  தொடங்கி போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் அதனை தொடர்ந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து

ஆகஸ்ட் 1 ,2016 பெங்களுரூ முதல் கூர்க் வரையிலான 380கிமீ பயண தூரத்தில் அன்றைய எண்டூரன்ஸ் கார்கள் போட்டி மட்டுமே நடந்தது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ் மரணத்தால் அல்டிமேட் பிரிவு போட்டிகள் நடைபெறவில்லை.

ஆகஸ்ட் 2, 2016 கூர்க் முதல் முருதேஸ்வர் வரையிலான450 கிமீ  பயண தூரத்தில் அல்டிமேட்கார் பிரிவில்  சுசூகி வாட்டரா காரில் போட்டியிட்ட சுரேஷ் ரானா மற்றும் பர்மிந்தர் தக்கர் (இணை-ஓட்டுனர்) முன்னிலை வகித்தனர். அவர்களை தொடர்ந்து 2வது இடத்தில் மாருதி ஜிப்ஸி அமன்பிரீத் அலுவாலியா மற்றும் கரண் ஆர்யா (இணை-ஓட்டுனர்) , 3வது இடத்தில் மாருதி ஜிப்ஸி காருடன் சந்தீப் சர்மா மற்றும் கரண் ஆர்யா (இணை-ஓட்டுனர்).

அல்டிமேட் பைக் பிரிவில் டிவிஎஸ் அப்பாச்சி 450 FX பைக்குடன் பயணித்த அப்துல் வாகித், டி நடராஜ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

ஆகஸ்ட் 3, 2016  முருதேஸ்வர் முதல் சிமோகா வரையிலான350 கிமீ  பயண தூரத்தில் அல்டிமேட்கார் பிரிவில்  சுசூகி வாட்டரா காரில் போட்டியிட்ட சுரேஷ் ரானா மற்றும் பர்மிந்தர் தக்கர் (இணை-ஓட்டுனர்) முன்னிலை வகித்தனர். அவர்களை தொடர்ந்து 2வது இடத்தில் மாருதி ஜிப்ஸி அமன்பிரீத் அலுவாலியா மற்றும் கரண் ஆர்யா (இணை-ஓட்டுனர்) , 3வது இடத்தில் ஜஸ்மோகன் சிங் மற்றும் விக்ரம்  (இணை-ஓட்டுனர்).

அல்டிமேட் பைக் பிரிவில் டிவிஎஸ் அப்பாச்சி 450 FX பைக்குடன் பயணித்த  டி நடராஜ் , சஞ்சய் குமார் மற்றும் ஃபெபின் ஜோஸ்  ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். அப்துல் வாகித் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் விலகிகொண்டார்.

தொடர்ச்சியா முதல் மூன்று இடங்களை பெற்று வந்த போட்டியாளர்கள் 2200 கிமீ பயணத்தை கோவாவில் நிறைவு செய்தனர்.

2016 தக்‌ஷின் டேர் வெற்றியாளர்கள் பட்டியல்

marutisports