இந்தியாவின் சிறந்த பைக் – 2016

இந்தியாவின் சிறந்த பைக் 2016 ( Indian Motorcycle Of the Year – IMOTY 2016)விருதினை யமஹா ஆர்3 பைக் வென்றுள்ளது.  சிகேடி முறையில் விற்பனையில் உள்ள யமஹா ஆர்3 பைக்கின் விலை ரூ.3.25 லட்சம் ஆகும்.

Yamaha YZF R3

இறுதி சுற்றில் பங்கேற்ற பைக்குகள் ஹோண்டா சிபிஆர்650எஃப் , பெனெல்லி டிஎன்டி 300 மற்றும் யமஹா ஆர்3 ஆகும். இவற்றில் ஆர்3 பைக் மற்ற இரண்டையும் விழ்த்தி இந்தியாவின் சிறந்த பைக் 2016 என்ற பட்டத்தினை வென்றுள்ளது. மேலும் பங்கேற்ற பைக்குள் மோஜோ , பெனெல்லி 600i, பெனெல்லி TNT 899, பெனெல்லி TNT 1130, பெனெல்லி TNT 600 GT, பஜாஜ் CT 100 மேலும் பல..

மேலும் படிக்க ; சிகேடி என்றால் என்ன ?

இந்தியாவின் சிறந்த பைக்கிற்கான தேர்வுமுறை விலை , மைலேஜ் , தரம் , ஸ்டைல் , புதிய நுட்பங்கள் , இந்திய சாலைக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

யமஹா ஆர்3 பைக்கில் 42பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  ஆனால் இந்த பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷனாலாகவும் இல்லை.

மேலும் படிக்க ; இந்தியாவின் சிறந்த கார் – ICOTY 2016

கடந்த 2015ம் ஆண்டில் ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக் வென்றது. 2014யில் ராயல் என்ஃபீல்டு கன்டென்டிள் ஜிடி , 2013யில் கேடிஎம் டியூக் 200 மற்றும் 2012யில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஆகும்.

Yamaha R3 wins Indian Motorcycle Of the Year – IMOTY 2016