2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய நிசான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2017 நிசான் GT-R காரினை போலவே தோற்ற மாற்றங்களை நிஸ்மோ பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட 20 PS ஆற்றலை கூடுதலாக பெற்று ஜிடி-ஆர் நிஸ்மோ 570 PS ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

nissan-gtr-nismo-2017

nissan-gtr-nismo-2017

570 PS ஆற்றலை வெளிப்படுத்துக்கூடிய 3.8 லிடர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 652 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேத்தினை எட்டுவதற்கு 2.8 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

முந்தைய மாடலை விட மாறுபட்ட பல அம்சங்களில் மேம்படுத்தப்பட்ட்டுள்ளது. குறிப்பாக என்ஜின் ஆற்றல் ,  பாடி கட்டமைப்பு ,  ஷாக் அப்சார்பர் , ஸ்பீரிங் , ஸ்டெபைலைஸர் மற்றும் கார்னரிங் பெர்ஃபாமென்ஸ் 2 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளி தோற்றத்தில் பம்பர்கள் கார்பன் ஃபைபர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 விதமான வண்ணங்களை பெற்றுள்ள ஜிடி-ஆர் நிஸ்மோ காரின் உட்புறத்தில் டேஸ்போர்டு , ஸ்டீயரிங் , லெதர் பயன்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட இருக்கைகளை பெற்றுள்ளது.

2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் படங்கள்

[envira-gallery id="7697"]

Exit mobile version