Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 கேடிஎம் டியூக் 390 பைக் படம் வெளியானது

by MR.Durai
12 June 2016, 6:14 am
in Auto News
0
ShareTweetSend

வரவிருக்கும் 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் முழு உற்பத்திநிலை படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பஜாஜ் சக்கன் ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

 

இந்திய சந்தையில் இளம் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற பிரிமியம் ரக ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள்களை கொண்டுள்ள கேடிஎம் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றது.

விற்பனையில் உள்ள டியூக் 390 பைக்கினை விட முற்றிலும் மாறுபட்ட டிசைன் தாத்பரியங்களுடன் காட்சியளிக்கும் டியூக் 390 பைக்கின் முகப்பில் பெற்றுள்ள இரட்டை பிரிவினை கொண்ட முகப்பு விளக்கு , கூடுதல் ஃபேரிங் , ஃபென்டர் மற்றும் பெட்ரோல் டேங்க போன்றவற்றுடன் தொழில்நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை பெற்று விளங்கும்.

விற்பனையில் உள்ள மாடலில் 373.2சிசி ஒரு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 45 bhp மற்றும் டார்க் 35Nm ஆகும். வரவுள்ள புதிய மாடலில் யூரோ 4 மாசு உமிழ்வு என்ஜின் மற்றும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களாகவே ஸ்பெயின் நாட்டில் சோதனையில் இருந்து வரும் டியூக் 390 படமும் வெளியாகியிருந்தது.

 

கூடுதல் ஸ்டைல் மற்றும் கூடுதல் ஆற்றலை பெற்ற மாடலாக 2017 கேடிஎம் டியூக் 390 பைக்  விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் டியூக் 390 அக்டோபர் மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரும் . அதனை தொடர்ந்து இந்தியாவிலும் களமிறங்கும்.

Related Motor News

அப்டேட் செய்யப்பட்ட கேடிஎம் 250 டியூக்கில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் வெளியானது

ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனை வெளியிட்ட கேடிஎம்

புதிய நிறத்தில் 2024 கேடிஎம் 250 டியூக் வெளியானது

புதிய நிறங்களில் கேடிஎம் RC390, RC200, RC125 விற்பனைக்கு அறிமுகமானது

2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

விரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது

Tags: KTM
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

range rover SV BESPOKE

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

6 ஏர்பேக்குகளை பெற்ற 2025 மாருதி சுசூகி பிரெஸ்ஸா வெளியானது

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan