2017 முதல் ஹோண்டா கார் விலை 3 % உயர்கின்றது

வருகின்ற 2017 ஜனவரி முதல் இந்தியா ஹோண்டா கார் பிரிவு தங்களுடைய அனைத்து மாடல்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. பிஆர்-வி காரும் விலை உயர்வினை சந்திக்கின்றது.

அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனம் மற்றும் டாலருக்கு எதிராக சரிந்து வரும் ரூபாய் பரிமாற்றம் போன்ற காரணங்களாலே விலை உயர்வினை தவிரக்க இயலவில்லை என ஹோண்டா கார் இந்தியா நிறுவன தலைவர் யசிரோ உனோ தெரிவித்துள்ளார்.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அமேஸ் , பிரியோ , சிட்டி , பிஆர்-வி ,அக்கார்டு மற்றும் மொபிலியோ போன்ற கார்களை விற்பனை செய்து வருகின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த  காம்பேக்ட் ரக பிஆர்-வி எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

சமீபத்தில் டொயோட்டா , ஹூண்டாய் ,டாடா மோட்டார்ஸ் , ரெனோ, நிசான் ,டட்சன் , மெர்சிடிஸ்-பென்ஸ் என பல நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை கனிசமாக உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.

Exit mobile version