2017 ஹூண்டாய் வெர்னா காரில் மைல்ட் ஹைபிரிட் வருகை

மாருதி சுஸூகி சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்விஹெச்எஸ் நுட்பம் போல வரவுள்ள 2017 ஹூண்டாய் வெர்னா காரில் மைல்ட் ஹைபிரிட் ஆப்ஷனை சேர்க்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸூகி நிறுவன கார்களில் நிறுவப்பட்டுள்ள SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) எனப்படும் ஸ்டார்டர் கிட்டுடன் இணைந்த ஸ்டார்ட் /ஸ்டாப் வசதி மற்றும் பிரேக் ஆற்றலை ரீஜெனரஷன் செய்யும் அமைப்பினை போன்ற சிறிய அளவிலான ஹைபிரிட் அம்சத்தை அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வெர்னா செடான் காரில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெறுவதின் வாயிலாக மத்திய அரசின் FAME எனப்படும் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவிலான மானியத்தை பெறும் என்பதனால் விலை சற்று குறைவாகவே இருக்கும்.  சமீபத்தில் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னா காரின் வடிவ தாத்பரியங்களை கொண்டாதாகவே புதிய வெர்னா வரவுள்ளது.

புதிய வெர்னா காரின் முகப்பு கிரில் தோற்றம் ,ஹெட்லைட் , முன் மற்றும் பின் பம்பர்களில் மாற்றங்களை பெற்று விளங்கும். இதில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு அமைப்பினை கொண்ட இன்டிரியரில் முக்கிய அம்சமாக காரின் நீளம் 30மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் காரில் சிறப்பான இடவசதி கிடைக்கும். மேலும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ,ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா , ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். விற்பனையில் உள்ள அதே எஞ்சின் ஆப்ஷனுடன் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸூகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கு கடுமையான சவாலாக 2017 ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

[youtube https://www.youtube.com/watch?v=y6Q_nf3KMI4]

Exit mobile version