Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ஹோண்டா 160cc பைக்குகளின் என்ஜின் விபரம், விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

160cc சந்தையில் உள்ள ஹோண்டா பைக்குகளின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை, சிறப்பு அம்சங்கள்

By MR.Durai
Last updated: 25,August 2025
Share
SHARE

இந்தியாவில் ஸ்போர்ட்டிவ் இருசக்கர வாகன சந்தையின் ஆரம்பமாக உள்ள 150-160cc உள்ள பிரிவில் ஹோண்டா நிறுவனம் இரண்டு பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் இரண்டும் ஒரே என்ஜினை பயன்படுத்தி குடும்பங்களுக்கான பயன்பாடுக்கு ஏற்றதாக யூனிகார்ன் 160 மற்றும் ஸ்போர்ட்டிவ் லுக்கில் உள்ள SP160 என இரு மாடல்களின் என்ஜின் விபரம், மைலேஜ், சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளளலாம்.

இந்த மாடல்களுக்கு போட்டியாக ஹீரோ, பஜாஜ் யமஹா, கேடிஎம் மற்றும் சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களும் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன. முதலில் ஃபேமிலி லுக்கில் தொடர்ந்து இந்தியாவின் சிறப்பான 160சிசி பைக்காக உள்ள யூனிகார்ன் 160 பற்றி அறியலாம்.

Contents
  • Honda Unicorn 160
  • Honda SP160

honda 160cc bikes

Honda Unicorn 160

மிகவும் அக்ரோஷமான தோற்ற அமைப்பில் இல்லாமல் வழக்கமாக கிடைக்கின்ற கம்யூட்டர் மாடலை போலவே அமைந்திருக்கின்ற ஹோண்டாவின் யூனிகார்ன் 160 விலை ரூ.1,09,200 பைக்கில்  HET (Honda Eco Technology) நுட்பத்தினை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் இதன் மைலேஜ் லிட்டருக்கு 48-50 கிமீ வழங்குகின்றது.

டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு அம்சங்களை கொண்டு இரு பக்கத்திலும் 18 அங்குல டயர் பெற்று முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள யூனிகானில் கிரே, ப்ளூ, ரெட் மெட்டாலிக் மற்றும் கிரே என நான்கு நிறங்களை கொண்டுள்ளது.

2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1,47,785 ஆகும்.

2024 honda unicorn on-road price and specs

Honda SP160

விற்பனையில் உள்ள எஸ்பி125 பைக்கின் டிசைனை பகிர்ந்து கொண்டு ரூ.1,23,074 முதல் ரூ.1,29,079 விலையில் கிடைக்கின்ற SP160 பைக் மாடலில் சிங்கிள் டிஸ்க் மற்றும் டூயல் டிஸ்க் என இரு வேரியண்டுகளை பெற்றுள்ளது.

HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. சேஸ் மற்றும் என்ஜின் யூனிகாரனை பைக்கில் இருந்து பெற்று SP160 மைலேஜ் 45-48 கிமீ வெளிப்படுத்துகின்றது.

17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது. மற்றபடி,, எல்இடி ஹெட்லைட், 4.2 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றுள்ளது.

2025 ஹோண்டா SP160 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1,52,185 முதல் 1,58,673 ஆகும்.

honda sp160 blue 1

போட்டியாளர்கள் யார்..?

யூனிகாரன் 160 பைக்கிற்கு போட்டியாக நேரடி மாடல் இல்லை என்றாலும் SP160 மற்றும் யூனிகானுக்கு போட்டியாக உள்ள பல்சர் 160 பைக்குகள், எக்ஸ்ட்ரீம் 160 மற்றும் அப்பாச்சி 160 போன்றவற்றில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ரைடிங் மோடுகள், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்ற மாடலகள் மாற்றாக உள்ளன.

எஸ்பி 160 மாடலை விட யூனிகார்ன் சிறந்த ரீசேல் மதிப்பு மற்றும் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை மாதந்தோறும் பதிவு செய்து வருகின்றது.

மேலும் படிக்க – ஹோண்டா எஸ்பி 160 போட்டியாளர்கள் ஒப்பீடு

mahindra be6 batman edition suv
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
TAGGED:160cc BikesHonda SP 160Honda Unicorn
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved