Automobile Tamilan

3 லட்சம் பேர் உயிரை பலி வாங்கியதா மாருதி 800 கார் – அதிர்ச்சி ரிபோர்ட்

இந்தியாவின் மிக பிரபலமான மாருதி நிறுவனத்தின் மாருதி 800 கார்களில் ஏற்பட்ட  விபத்தில் மட்டுமே 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் கமால் சொய் தெரிவித்துள்ளார்.

Maruti-800

1983 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட இந்திய ஆட்டோமொபைல் அடையாளங்களில் ஒன்றான மாருதி 800 கார் மொத்தம் 28.7 லட்சம் கார்கள் விற்பனை ஆகி இந்தியாவில் மட்டும் 26.6 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாடூடே ஆட்டோ வெளியிட்டுள்ள டெல்லியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கருத்தரங்கில் டாக்டர் கமால் சொய் வெளியிட்டுள்ள செய்தியில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் மாருதி 800 கார் என இரண்டும் கார்களும் மிக மோசமான பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விபத்து அறிக்கை

இந்தியாவில் நடைபெற்றுள்ள விபத்துகளில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொகுசு செடான் காரான பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களில் ஏற்பட்ட விபத்துகளில் 12 கார்கள் இரு துண்டுகளாக உடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவின் பிரசத்தி பெற்ற காரான மாருதி 800 கார் விபத்துகளில் சிக்கியதில் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட விபத்துகளின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ செய்தி தொடர்பாளர் கருத்து கூறுகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிஎம்டபிள்யூ கார்களும் சர்வதேச பாதுகாப்பு தரத்தினை கொண்டே வடிவமைக்கப்பட கார்கள் என குறிப்பிட்டுள்ளார். மாருதி சுசூகி எவ்விதமான கருத்துகளையும் வெளியிடவில்லை.

இதுபற்றிய உங்கள் கருத்து என்ன மக்களே .. மறக்காமா பதிவு பன்னுங்க…

 

Exit mobile version