40 கார் மாடல்களை ஓரங்கட்டிய ஃபோக்ஸ்வேகன் குழுமம்

உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமமாக விளங்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் 40 பெட்ரோல் மற்றும் டீசல் கார் மாடல்களின் திட்டத்தை ரத்து செய்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்களுக்கு பல பில்லியன் யூரோ முதலீடு செய்ய திட்டமிட்டு வருகின்றது.

volkswagen-budd-e-concept-fr

ஃபோக்ஸ்வேகன் , ஆடி , போர்ஷே ,ஸ்கோடா ,சீட் , பென்ட்லீ , புகாட்டி , லம்போர்கினி , மேன் ,ஸ்கேனியா , ஃபோக்ஸ்வேகன் கமெர்சியல் மற்றும் டூகாட்டி மோட்டார்சைக்கிள் போன்ற 12 பிராண்டுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமம் உலக அளவில் 340க்கு மேற்பட்ட கார் மாடல்களை மற்றும் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

மிகப்பெரிய டீசல் என்ஜின் மாசு உமிழ்வு மோசடியால்  நற்பெயரை இழந்த ஃபோக்ஸ்வேகன் அதனை தற்பொழுது ஈடுகட்டி வரும் நிலையில் அடுத்த தலைமுறை கார் மாடல்களை எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.

அடுத்த 10 வருடங்களில் 30க்கு மேற்பட்ட மின்சார கார்கள் மற்றும் தானியங்கி கார்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் 2025 ஆம் வருடத்துக்குள் ஆண்டுக்கு 3 மல்லியன் எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

volkswagen-budd-e-concept-sketch-electric

எந்தெந்த கார் மாடல்கள் நிறுத்தப்படும் என்பதற்கான உறுதியான தகவல்கள் இல்லையென்றாலும் பெரும்பாலான மாடல்களை சந்தையிலிருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமம் டீசல் மாசு உமிழ்வு மோசடியால் €16.2 பில்லியன் அளவிற்கு அபராதம் செலுத்தியுள்ளது.

கட்டுரை உதவி ; https://global.handelsblatt.com/