Site icon Automobile Tamilan

48.2 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விப்ட் ஹைபிரிட்

மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் ஹைபிரிட் மாடலை மாருதி ஸ்விப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் என்ற பெயரில் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம். மாருதி ஸ்விப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் மைலேஜ் லிட்டருக்கு 48.2கிமீ ஆகும்.

மிக சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டினை குறைக்கும் வகையில் மாருதி ஸ்விப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் மாடல் வடிவைமைத்துள்ளனர்.

 மாருதி ஸ்விப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர்

மாருதி ஸ்விப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் காரில் 650சிசி பெட்ரோல் என்ஜின் மற்றும் 3கிலோவாட் சக்தியை தரவல்ல மின் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டின் மூலம் 73பிஎஸ் ஆற்றலை தரும்.

மாருதி ஸ்விப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் ஹைபிரிட் கார் மைலேஜ் லிட்டருக்கு 48.2கிமீ தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

90 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஏறும் லித்தியம் பேட்டரி 25கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் மூன்று விதமான ஓட்டுதல் திறனை கொண்டிருக்கும். அவை ஹைபிரிட் , பேரலல் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் ஆகும்.

 ஹைபிரிட் மோட்

இந்த ஹைபிரிட் ஓட்டுதல் வகையில் பெட்ரோல் என்ஜின் மற்றும் மின் மோட்டார் இணைந்து இயங்கும்.

பேரலல் ஹைபிரிட் மோட்

பேரலல் ஹைபிரிட் மோடில் பெட்ரோல் என்ஜின் மற்றும் மின் மோட்டார் இரண்டும் தனித்தினியாக ஒன்றன்பின் ஒன்றாகவும் இயங்கும்.

எலக்ட்ரிக் மோட்

எலக்ட்ரிக் ஓட்டுதல் வகையில் 3கிலோவாட் மின் மோட்டாரில் மட்டும் இயங்கும்.

இதில் பயன்படுத்தப்படும் 650சிசி என்ஜின் , மின் மோட்டார் மற்றும் லித்தியம் ஐன் பேட்டரி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாம். ஆனாலும் விலை சவாலாக இருக்கும்.

அதிகப்படியான எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைப்பதற்க்காக கடந்த சில வருடங்களாக புதிய முயற்சி எடுத்து வருகின்றோம். அதன் பலனாகத்தான் எரிபொருள் சிக்கனத்தின் அளவு கூடியுள்ளது. ஆட்டோ கியர் ஸ்ஃப்ட் தொழில்நுட்பத்தினை பரவலாக அனைத்து மாடல்களில் கொண்டு வர முயற்சித்துள்ளோம்.

மேலும் புதிய நுட்பங்கள் , சிறப்பான எரிபொருள் சிக்கனம் , மாசுகளை குறைப்பதற்க்கு சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாருதி சுஸுகி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கெனிச்சி அயூக்குவா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த FAME India (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles) திட்டத்தின் மூலம் சுற்றுசூழலுக்கு மாசு தராத வகையில் உருவாக்கப்படும் வாகனத்திற்க்கு ரூ1.38 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும்.

இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹைபிரிட் கார்கள் பிஎம்டபிள்யூ i8 , டொயோட்டா கேம்ரி மற்றும் டொயோட்டா பிரையஸ் போன்ற ஹைபிரிட் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Maruti Suzuki Swift Range Extender hybrid details

Exit mobile version