5 லட்சம் ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனை

கடந்த 2002ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 5 லட்சம் கார்களை இந்திய சந்தையில் விற்பனை ஆகியுள்ளது. ஸ்கார்ப்பியோ எஸ்யூவி என்றாலே இந்தியர்களின் மனதில் தனி இடம் என்றுமே உண்டு என்பதில் ஐயமில்லை.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
டிராக்டர் சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த மஹிந்திரா 2002ம் ஆண்டில் ஸ்கார்ப்பியோ அறிமுகத்திற்க்கு பின்னர் மஹிந்திராவின் தலையெழுத்தே மாறி போனது என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பிரபலமாகியது.
கடந்த வருடத்தில் முற்றிலும் மாறுபட்ட ஸ்கார்பியோ விற்பனைக்கு வந்தது. புதிய தளத்தில் நவீன அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்ப்பியோ விற்பனையில் தொடர்ந்து சீரான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.
சஃபாரி ஸ்டாரம் , டஸ்ட்டர் , டெரோனோ என பல போட்டியாளர்கள் வந்தாலும் தனது நன்மதிப்பினால் மாதம் 4000த்திற்க்கு மேற்பட்ட கார்களை விற்பனை செய்து வருகின்றது.
2.5 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் என இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷன் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் போன்றவற்றில் கிடைக்கின்றது. மேலும் அடுத்த சில வருடங்களில் பெட்ரோல் ஸ்கார்ப்பியோ காரும் வரவுள்ளது.
Mahindra Scorpio cross 5 lakh units sales in India
Exit mobile version