5.125 கீலோமிட்டரை 2 நிமிடத்தில் கடந்த மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் கார் புதிய சாதனையை  நிகழ்த்தியுள்ளது. கிரேட் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் பார்முலா-1 டிராக்கில் சாதனையை நிகழ்த்தியவர் நார்மன் சைமன் ஆவார்.
Mercedes-Benz SLS AMG

ஜெர்மனியை சேர்ந்த நார்மன் சைமன்  ஏஎம்ஜி டிரைவிங் இன்ஸ்டரக்டர் ஆவார்.

5.125 கீலோமிட்டர் உள்ள லேப்பை சுமார் 2 நிமிடங்கள் 14.521 விநாடிகளில் கடந்துள்ளார்.

இதுபற்றி மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியப் பிரிவு தலைவர் எபர்ஹார்டு கெர்ன் கூறுகையில்

உற்பத்தி நிலையிலே எஸ்எல்எஸ் ஏஎம்ஜி தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகின்றது. இதனை நாங்கள் தொழில்நுட்பத்தின் மிக பெரிய வளர்ச்சியாக கருதுகின்றோம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரில் 6.3 லிட்டர் வி 8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது . இந்த கார் வெளிப்படுத்தும் ஆற்றல் 571பிஎஸ் மற்றும் 650என்எம் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார் பார்முலா-1 பந்தயங்களின் பாதுகாப்பு காராகும்.

Exit mobile version