7வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் விடைபெறுகின்றது

ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார் வரிசையில் 2003 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 7வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார் உற்பத்தி நிறைவடைந்துள்ளது. புதிய தலைமுறை பேன்டம் 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம்

உலகின் மிக சிறந்த சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கே உரித்தான தனி மறியாதை கொண்ட கார்களில் ஒன்றான பேன்டம் மாடலின் சிறப்பு மாடலாக ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் VII வடிவமைக்கப்பட்டுள்ளது. 1930 ஆம் ஆண்டு முதன்முறையாக பேன்டம் கார் தயாரிப்பு தொடங்கப்பட்டது.

connoisseur collector என்ற தீமை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 7வது தலைமுறையின் இறுதி மாடல் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனையில் உள்ள அதே 6.75 லிட்டர் V-12  பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 454 பிஹெச்பி பவர் , 720 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.  பேண்டம் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 238 கிமீ ஆகும்.

இறுதி மாடலானது சாதரன பேண்டம் காரைவிட 250மிமீ கூடுதல் நீளத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. 7வது தலைமுறையின் இறுதிமாடல் நீல வெல்வெட் வண்ணத்தில் தோற்றத்தை பெற்றுள்ளது.இன்டிரியரில் உயர்தரமான சொகுசு தன்மை கொண்ட இந்த காரில் 1930களில் இடம்பெற்றிருந்த பவுடர் நீலம் லெதர் வண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இன்டிரியரில் சிறப்பு கடிகாரம் ,உய்தர கார்பெட் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் பாரம்பரிய சின்னமான Spirit of Ecstasy சில்வரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி மாடலின் விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. சாதரன ரோல்ஸ்ராய்ஸ் பேன்டம் காரின் ஆரம்ப விலை ரூ.4 கோடியில் தொடங்குகின்றது.

Exit mobile version