கியா QYi காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம் -ஆட்டோ எக்ஸ்போ 2020

kia stonic suv

கியா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது மாடலாக 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற QYi காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனைக்கு 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாமஹிந்திரா எக்ஸ்யூவி300ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ள QYI எஸ்யூவி காரில் மூன்று விதமான என்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இரண்டு பெட்ரோல் மற்றொன்று டீசல் என்ஜின் ஆகும்.

புதிய QYI என்ற குறீயிட்டு பெயரில் தயாராகி வரும் இந்த காரில் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் பெரும்பாலான உதிரிபாகங்கள் மற்றும் என்ஜின் உட்பட போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற கியா ஸ்டோனிக் காரின் வடிவமைப்பினை பெற்றிருக்கலாம்.

இன்டிரியர் அமைப்பில் செல்டோஸில் இடம்பெற்றுள்ள UVO கனெக்ட்டிவிட்டி அம்சமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

வென்யூ காரில் உள்ள என்ஜினை பெற உள்ள இந்நிறுவன எஸ்யூவி பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.

மேலதிக விபரங்கள் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியாக உள்ளது. குறிப்பாக இந்த காரின் உற்பத்தி நிலை காட்சிப்படுத்தப்படலாம். இந்நிறுவனம் ரூ.30 லட்சம் விலையில் கியா கார்னிவல் எம்பிவி மாடலை பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிடுகின்றது.