Automobile Tamil

2020 ஹூண்டாய் கிரெட்டா காரின் அறிமுக விபரம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

கிரெட்டா கார் விபரம்

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் 2020 ஹூண்டாய் கிரெட்டா அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய கிரெட்டாவின் தோற்ற அமைப்பு உட்பட பல்வேறு இன்டிரியர் மாற்றங்களை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

கடந்த வருட சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஐஎக்ஸ் 25 எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பு முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்டு ஹூண்டாயின் வென்யூ மற்றும் பிரபலமான பாலிசேட் உயர் ரக எஸ்யூவி கார்களுக்கு இணையான முகப்பு தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. இதே போன்ற அமைப்பினை இந்தியாவின் கிரெட்டாவும் பெறலாம். மிகவும் அகலமான ஹூண்டாய் கார் நிறுவனத்தின் பாரம்பரியமான கேஸ்கேடிங் கிரில் பளப்பளப்பான கருப்பு நிறத்துடன், ஸ்கிட் பிளேட் பக்கவாட்டு அமைப்பு மற்றும் முன் மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கிரெட்டா காரில் சீன சந்தையில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அமைப்பினை இந்தியாவிலும் இந்நிறுவனம் வழங்க வாய்ப்புகள் உள்ளது. இன்டிரியரின் டேஸ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீலில் சிறிய மாற்றங்கள் பெற்றிருக்கும்.

கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ள பிஎஸ் 6 என்ஜின் ஆப்ஷன்களை அப்படியே க்ரெட்டா காரும் பெற உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசலுக்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்கும். அடுத்தப்படியாக கூடுதலாக  1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் முதன்முறையாக இந்திய சந்தைக்கு புதிய ஹூண்டாய் கிரெட்டா காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் மாத மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

உதவி – ஆட்டோகார் இந்தியா

Exit mobile version