2020 டாடா ஹாரியர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் டீசர் வெளியீடு – ஆட்டோ எக்ஸ்போ 2020

0

tata harrier bs6 teased

2020 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாரியர் எஸ்யூவி பிஎஸ்6 என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் சன்ரூஃப் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முன்பாக இந்நிறுவனம் அல்ட்ராஸ், புதிய நெக்ஸான், டியாகோ, டிகோர் போன்றவை வெளியிடப்பட்டுள்ளது.

Google News

தற்போது வெளியிடப்பட்ட டீசரில் ஆட்டோமேட்டிக் வேரியண்டை உறுதி செய்யும் வகையில் ஆட்டோமேட்டிக் லிவர் வழங்கப்பட்டு P, R, N, D உள்ளதை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஆட்டோமேட்டிக் கியரில் சமீபத்தில் டாடா பயன்படுத்த துவங்கியுள்ள ட்ரை ஏரோ டிசைனை வழங்கியுள்ளது.

விற்பனைக்கு கிடைக்கின்ற மாடல் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றிருக்கும். இந்த வாகனத்தின் பவர் 170 பிஹெச்பி மற்றும் டார்க் 350 என்எம் வெளிப்படுத்தும். விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட அதிகபட்சமாக ரூபாய் 45 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் டாடா நிறுவனம் வர்த்தக வாகனங்கள் உட்பட மொத்தமாக 26 வாகனங்களை காட்சிக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக எஸ் பிரெஸ்ஸோ காரை எதிர் கொள்ள உள்ள மினி எஸ்யூவி ஹார்ன்பில் அல்லது ஹெச்2எக்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்த உள்ளது.