Automobile Tamilan

அசோக் லேலண்ட் சர்க்யூட்-S மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளராக விளங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதல் மின்சார பேருந்தை அசோக் லேலண்ட் சர்க்யூட்-S என்ற பெயரில் சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

அசோக் லேலண்ட் சர்க்யூட்-S

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்ய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் தீவரமான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், அசோக் லேலண்ட் பொது போக்குவரத்து துறைக்கு ஏற்ற பேருந்தாக சர்க்யூட்-எஸ் விளங்க உள்ளது.

அசோக் லேலண்ட் மற்றும் சன் மொபிலிட்டி ஸ்வாப்பிபள் ஸ்மார்ட் பேட்டரிதயாரிப்பாளரும் இணைந்து இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலான பேட்டரியில் இயங்கும் பேருந்தினை வடிவமைத்துள்ளது. இந்த பேருந்துகள் 25-30 பயணிகள் வரை பயணிக்கும் திறன் கொண்ட இருக்கைகளை பெற்றுள்ளது.

மிக விரைவாக சார்ஜாகின்ற அம்சத்தை பெற்றுள்ள இந்த பேருந்துகள் பொது போக்குவரத்து துறைக்கு ஏற்றதாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த பேருந்துகள் அரசு போக்குவரத்து துறையில் பயன்பாட்டுக்குவர வர வாய்ப்புகள் உள்ளது.

அடுத்த 3-6 மாதங்களில் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரவுள்ள அசோக் லேலண்ட் சர்க்யூட்-S மின்சார பேருந்து விலை விபரம் வெளியிடப்படவில்லை.

Exit mobile version