Site icon Automobile Tamilan

auto expo 2020: ஆட்டோ எக்ஸ்போவில் கார், எஸ்யூவி அறிமுக முன்னோட்டம்

மாருதி ஃப்யூச்சரோ இ

7 பிப்ரவரி 2020 முதல் 12 பிப்ரவரி 2020 வரை நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள், பிஎஸ்6 வாகனங்கள் மற்றும் பல்வேறு புதிய நிறுவனங்கள் என அதிரவைக்க உள்ள நிலையில் எக்ஸ்போவில் வெளியாக உள்ள கார்களின் முன்னோட்டத்தை அறிந்து கொள்ளலாம்.

15 வது ஆட்டோ எக்ஸ்போவின் நோக்கமாக  ‘Explore the World of Mobility’ என்பதனை மையமாக கொண்டுள்ளது. இதன் நோக்கம் பாதுகாப்பு, தூய்மையான, கனெக்ட்டிவிட்டி மற்றும் பகிர்தல் தொடர்பான மொபைலிட்டி சேவைகளை கொண்டிருக்கும் என குறிப்பிடுகின்றது. குறிப்பாக இந்த ஆண்டு நடைபெறுகின்ற கண்காட்சியில் பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் ஹோண்டா, ஃபோர்டு, டொயோட்டா, லெக்சஸ், சிட்ரோயன், ஃஎப்சிஏ (ஃபியட் & ஜீப்), ஆடி, பிஎம்டபிள்யூ, வால்வோ, ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கவில்லை.

மாருதி சுசுகி

நாட்டின் முதன்மையான வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் உட்பட 17 கார்களை காட்சிப்படுத்த உள்ளது. குறிப்பாக புதிய மாருதி இக்னிஸ், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஜிம்னி எஸ்யூவி, ஃப்யூச்சரோ இ எனப்படும் எஸ்யூவி கூபே கான்செப்ட் போன்றவற்றுடன் பல்வேறு ஹைபிரிட் ஆப்ஷன் மாடல்களை காட்சிக்கு கொண்டு வரவுள்ளது.

ஹூண்டாய்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம், மேம்பட்ட புதிய கிரெட்டா, டூஸான் எஸ்யூவி உட்பட குறைந்த விலை எலெக்ட்ரிக் கான்செப்ட், நெக்ஸோ ஃப்யூவல் செல் கார், வெர்னா, ஐ30 என் போன்றவற்றுடன் 13 கார்களை தனது அரங்கில் வெளியிட உள்ளது.

மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை பல்வேறு புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் காட்சிப்படுத்துவதுடன் புதிய தலைமுறை எக்ஸ்யூவி 500, எலெக்ட்ரிக் இகேயூவி100, இஎக்ஸ்யூவி300, 300 ஹெச்பி பவரை வழங்கும் ஃபன்ஸ்டார் இவி போன்றவற்றுடன் மஹிந்திரா ஆட்டாம் எலெக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள், பல்வேறு வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக 18 வாகனங்களை காட்சிக்கு கொண்டு வரவுள்ளது.

டாடா மோட்டார்ஸ்

ஆட்டோ எக்ஸ்போவில் 26 வாகனங்களை காட்சிப்படுத்த உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய ஹெச்2எக்ஸ் மினி எஸ்யூவி, அல்ட்ராஸ் இவி, கிராவிட்டாஸ், ஹாரியர் ஆட்டோமேட்டிக் என 12 பயணிகள் வாகனங்களை வெளியிட உள்ளது.

வோக்ஸ்வேகன்

உலகின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான போக்ஸ்வேகன் குழும்த்தின் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிப் ப்ராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் ஐடி.கிராஸ் எலெக்ட்ரிக் கார் உட்பட டி ராக், டிகுவான் ஆல் ஸ்பேஸ் மற்றும் இந்தியாவிற்கான  A0 IN எனப்படுகின்ற டி கிராஸ் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மற்ற பிராண்டுகளான போர்ஷே, ஸ்கோடா மற்றும் லம்போர்கினி பிராண்டுகளின் இந்திய பங்களிப்பையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

ஸ்கோடா

லிமிடெட் எடிசன் ஆர்எஸ்245 உட்பட இந்தியாவிற்கான பிரத்தியேக ஸ்கோடா விஷன் இன் கான்செபட், ஸ்கோடா கரோக், ஸ்கோடா சூப்பர்ப் போன்றவை வெளியாக உள்ளது.

ரெனால்ட்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஹெச்பிசி காம்பேக்ட் எஸ்யூவி,ஸோயி எலெக்ட்ரிக் கார் உட்பட பல்வேறு கான்செப்ட்களை காட்சிப்படுத்த உள்ளது.

கியா மோட்டார்ஸ்

கியா நிறுவனம் இந்தியாவில் அடுத்த மாடலாக கார்னிவல் எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் QYi கான்செப்ட் டீசரை வெளியிட்டுள்ளது. இதுதவிர சோல் இவி காரையும் காட்சிப்படுத்த உள்ளது.

எம்ஜி மோட்டார்ஸ்

எம்ஜி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் 6 இருக்கை கொண்ட ஹெக்டர் பிளஸ் மாடல் , மேக்சஸ் டி90 எனப்படுகின்ற எம்ஜி க்ளோஸ்டெர் எஸ்யூவி, குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மற்றும் செடான் ரக மாடலை காட்சிப்படுத்த உள்ளது.

கிரேட் வால் மோட்டார்ஸ்

இந்தியாவில் நுழைந்துள்ள சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் ஹவால் எஸ்யூவி மற்றும் ஓரா எலெக்ட்ரிக் வாகனங்களைக்காட்சிப்படுத்த உள்ளது.

இதுதவிர FAW ஹைமா, சாங்கன் ஆட்டோமொபைல்ஸ் போன்ற நிறுவனங்களும் தங்களுடையா மாடல்களை 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிட உள்ளன.

Exit mobile version