ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி அறிமுகமானது

maruti s presso cng

சிறிய ரக மைக்ரோ எஸ்யூவி மாடலாக விளங்குகின்ற மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் சிஎன்ஜி ஆப்ஷனை ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. இங்கே கஸ்டமைஸ் செய்யப்பட்ட பல்வேறு வசதிகளுடன் காட்சிக்கு உள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ எஸ்-சிஎன்ஜி காரில் 1.0-லிட்டர், மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 67 ஹெச்பி பவர் மற்றும் 90 என்எம் டார்க வழங்கும் நிலையில், இதன் அடிப்படையில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் போது 58 ஹெச்பி மற்றும் 78 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 5-வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ எஸ்-சிஎன்ஜியை LXi, LXi (O), VXi மற்றும் VXi (O) ஆகிய நான்கு வகைகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை பெட்ரோல் என்ஜின் மாடலை விட ரூ.60,000 அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் போட்டியில் ஹூண்டாய் சாண்ட்ரோ சிஎன்ஜி மற்றும் பிற மாருதி சிஎன்ஜி மாடல்கள் செலிரியோ மற்றும் ஆல்டோ கே 10 ஆகியவை அடங்கும்.

Exit mobile version