Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்போ 2020: 120 கிமீ பயணிக்கும் திறனுடன் ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போ 2020: 120 கிமீ பயணிக்கும் திறனுடன் ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்டைல் க்ரூஸர் கான்செப்ட்டை காட்சிக்கு கொண்டு வந்துள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வெளியிடக்கூடும்.

அகலமான விண்ட்ஸ்கீரின், தங்க நிறத்தினை பெற்ற பாடி பேனல்கள், க்ரோம் நிறத்திலான கைப்பிடிகளை கொண்டுள்ள இந்த கான்செப்டில் செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர், திருடுவதனை தடுக்கும் அலாரம், யூஎஸ்பி போர்ட், ஃபைன்டு மை ஸ்கூட்டர், கீலெஸ் இக்னிஷன் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கின்றது.

மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை வழங்குகின்ற 3 கிலோ வாட் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு, 4 கிலோவாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி மூலம் ஈக்கோ மோடில் பயணித்தால் 120 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகினாவா க்ரூஸர் மாடலில் இரு பக்கத்திலும் பெரிய 14 அங்குல சக்கரங்களுடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பரை பின்புறத்தில் கொண்டுள்ளது. இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது.

ரூ.80,000 முதல் ரூ.1,00,000 விலையில் வெளியாக உள்ள க்ரூஸர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு விற்பனைக்கு வெளியாகலாம்.

 

Exit mobile version