டாடா 45X கான்செப்ட் கார் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் அதிரடியான வடிவமைப்பினை வெளிப்படுத்தும் கார்கள் மற்றும் எஸ்யூவி கான்செப்ட்களை காட்சிப்படுத்தியுள்ள நிலையில், மிக அழகான ஸ்டைலான டாடா 45X என்ற பெயரில் ஹேட்ச்பேக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா 45X கான்செப்ட் கார்

ஆட்டோ எக்ஸ்போ அரங்கை அதிரவைத்துள்ள கான்செப்ட்களில் மிக முக்கியான ஒன்றாக விளங்கும் டாடா 45எக்ஸ் மாடல் இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ள மாடல் ஐ20, பலேனோ உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ளது.

அசத்தலான கான்செப்ட் மாடலாக வலம் வருகின்ற 45X கான்செப்ட்டில் இந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்மைலிங் கிரில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தட்டையான ஹெட்லைட்டுடன், பின்புறத்தில் Y வடிவ எல்இடி டெயில் விளக்குடன் காட்சிக்கு வைக்கப்பட்டு டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவ மொழியை அடிப்படையாக கொண்டு நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த கான்செப்ட் மாடலில் வீல் அளவு விபரம், கேபின் அமைப்பு, எஞ்சின் ஆகியவற்றின் விபரங்கள் வெளியாகவில்லை. இந்த கார் உற்பத்தி நிலைக்கு அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதால், இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றுமு 1.5 லிட்டர் ரெவோ டார்க் எஞ்சின் இடம்பெற்றிருக்கலாம். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

Exit mobile version