இத்தாலி நாட்டின் ஐகோனா டிசைன் நிறுவனத்தின் நியூக்ளியஸ் ஓட்டுநரில்லா கான்செப்ட் காரை 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்த உள்ளது. இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன வளர்ச்சியில் எங்களையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நியூக்ளியஸின் நீளம் 5.25 மீட்டர் மற்றும் 2.12 மீட்டர் அகலம் கொண்டது. இது 27 அங்குல சக்கரங்களில் 1.75 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மாடலில் வழங்கப்பட உள்ள மின்சார பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் மூலம் அதிகபட்சமாக 1200 கிலோமீட்டர் பயணத்தை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாடலில் வழங்கப்பட உள்ள 300 கிலோ எடையுள்ள பேட்டரி 6 செல்கள் கொண்டுள்ளது. இதனை பொல்லோரே ப்ளூ சொல்யூஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது அதிகபட்சமாக 600 பிஎஸ் சக்தி மற்றும் ஒவ்வொரு சக்கரத்திலும் 110 கிலோவாட் மோட்டார் உள்ளது. மேலும் ஒவ்வொன்றும் 5.3 கிலோ எடையுள்ள ஹைட்ரஜன் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் வழங்கப்பட உள்ளது. இந்த மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவது 3.5 நிமிடங்களை எட்டும் என்றும் இந்நிறுவனம் கூறுகிறது.
6 இருக்கை பெற உள்ள இந்த காரில் மிக சிறப்பான இடவசதி மற்றும் பல்வேறு நவீனத்துவமான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.
இந்நிறுவனத்தின் சிஇஓ கவூடியோ கூறுகையில், “இந்தியா வடிவமைப்பிற்கான அதிக திறன் கொண்ட ஒரு நம்பிக்கைக்குரிய சந்தை ஆகும். பாரம்பரிய மற்றும் புதிய உற்பத்தியாளர்களின் ஈடுபாட்டுடன் மின்சார வாகனங்களில் இந்தியா ஒரு முக்கிய சந்தையாக மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…