கியா QYi காம்பேக்ட் எஸ்யூவி டீசர் வெளியீடு – ஆட்டோ எக்ஸ்போ 2020

0

kia qyi suv teased

4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த மாடலான QYi காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்டினை முதல்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Google News

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ எஸ்யூவி அடிப்படையிலான இந்த கான்செப்ட் எஸ்யூவி காருக்கு சோநெட் என்ற பெயரை கியா சூட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் முதன்முறையாக இதன் டீசரை வெளியிட்டுள்ளது. கியா வெளியிட்டுள்ள டீசர் விற்பனையில் உள்ள வென்யூ மாடலை விட மிக ஸ்டைலிஷாகவும், அதேநேரத்தில் தனது பாரம்பரியமான டைகர் நோஸ் கிரிலை கொண்டதாக டீசர் செய்துள்ளது. தட்டையான ஹெட்லைட் பெற்று அதன் மேற்பகுதியில் எல்இடி ரன்னிங் விளக்குள், அகலமான ஏர் டேம் போன்றவை கொண்டிருக்கின்றது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்சு, ஸ்டைலிஷான அலாய் வீல் டிசைன் மற்றும் சில்வர் இன்ஷர்ட்டுகள் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் செல்டோஸில் இடம்பெற்றுள்ள UVO கனெக்ட்டிவிட்டி அம்சமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

வென்யூ காரில் உள்ள என்ஜினை பெற உள்ள இந்நிறுவன எஸ்யூவி பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாமஹிந்திரா எக்ஸ்யூவி300ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ளது.

மற்ற விபரங்கள் – ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் வெளியாகும்.

Kia QYi Sketch Rear